வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இரவின் நிழலால் மனம் நொந்து போன பார்த்திபன்.. வெறுத்து போய் எடுத்திருக்கும் முடிவு

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் பார்த்திபன். வித்யாசமான கதைகளை கொண்ட படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பார்த்திபன் செயல்பட்டு வருகிறார். அதன்படி ஒத்த செருப்பு என்ற படத்தை பார்த்திபன் இயக்கியிருந்தார்.

இந்த படத்திற்கு விருதுகள் கிடைத்தாலும் ரசிகர்கள் கொண்டாடவில்லை. அதன் பிறகு முதல் நான் லீனியர் படம் என்று இரவின் நிழல் படத்தை எடுத்தார். இந்த படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு ஒரு புறம் ஆதரவு கொடுத்தாலும், மற்றொருபுறம் எதிர்ப்பு கிளம்பியது.

Also Read : மேடையில் மயிரை வைத்து விக்ரமை வாரிவிட்ட பார்த்திபன்.. தங்கலான் கொடுத்த பதிலடி

அதுமட்டுமின்றி இந்த படமும் வசூலில் மிகப்பெரிய அடி வாங்கி இருந்தது. இவ்வாறு அவருடைய வித்தியாசமான முயற்சிக்கு பல விருதுகள் கிடைத்தாலும் எந்த படமும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இது இயக்குனர் பார்த்திபனுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் பார்த்திபன் அடுத்ததாகவும் வித்யாசமான படத்தை எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இப்படியே போனால் வேலைக்காகாது என பார்த்திபன் வேறு முடிவு எடுத்துள்ளார். அதாவது விருதுக்காக மட்டுமே படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை.

Also Read : விஜய்க்கு தம்பியாக நடிக்க இருந்த வாய்ப்பை நழுவ விட்ட குட்டி பார்த்திபன்.. அதனாலயே காணாமல் போன பரிதாபம்

இவரிடமும் இப்போதைக்கு படம் எடுப்பதற்கான பணமும் இல்லை. இதனால் கடுப்பான பார்த்திபன் இனிமேல் கமர்சியல் படம் மட்டுமே எடுக்கப் போவதாக சொல்லி உள்ளாராம். அதுவும் அந்த கமர்சியல் படங்கள் கலக்கலான நையாண்டி கலந்த படமாக எடுக்கவிருக்கிறாராம்.

ஏற்கனவே வடிவேலு உடன் இவர் நிறைய படங்களில் செய்யும் லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்போது மீண்டும் அதே ஜானரில் படங்களை எடுக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் பார்த்திபன் இயக்கும் படத்தில் அவர் நடிப்பாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Also Read : பொண்டாட்டி தொல்லை தாங்காம கழட்டி விட்ட 5 நடிகர்கள்.. இளம் நடிகையுடன் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்

Trending News