சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பவித்ராவை ரவுண்டு கட்டி இம்சை பண்ணும் பிசாசு.. தீபக் மூலம் பிக் பாஸ், தேவதைகளுக்கு வச்ச ஆப்பு

Vijay Tv Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று ரொம்பவே சூடு பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் ஏஞ்சல் மற்றும் டேவில் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டது தான். அந்த வகையில் சத்யா, ஜெப்ரி, பவித்ரா, அன்சிதா, ராயன், விஷால், ஆனந்தி இவர்களெல்லாம் ஏஞ்சலாகவும், தீபக், ராணவ், முத்துக்குமார், சாச்சினா, ஜாக்லின், மஞ்சரி, சௌந்தர்யா, தர்ஷிகா, அருண் இவர்கள் எல்லாம் பிசாசுகளாகவும் விளையாடி வருகிறார்கள்.

அத்துடன் தேவதைகளிடம் கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று இதயத்தை வாங்க வேண்டும் என்பதுதான் பிசாசுகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்க். அதனால் ஏஞ்சலாக இருப்பவர்களை கொடுமைப்படுத்தி துன்புறுத்தி இம்சை பண்ணும் அளவிற்கு பிசாசான போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வச்சு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் மஞ்சரி, பவித்ராவை டார்கெட் பண்ணி முட்டையை வாயிலே உடைத்து முழுங்கவும் துப்பவும் கூடாது. வாயிலே வைத்திருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு தலையில் முகத்தில் ட்ரெஸ்ஸில் முழுவதையும் தடவி கொடுமைப்படுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் முட்டை கருவை உடைத்து அதை முகத்தில் தடவி கொண்டே இருப்பது போல் டாஸ்க் கொடுத்து இம்சை பண்ணுகிறார்.

இதனால் பவித்ராவிடம் இருக்கும் ஹார்ட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மஞ்சரி இந்த மாதிரி துன்புறுத்தி வருகிறார். ஆனாலும் பவித்ரா எல்லா இம்சையும் தாங்கிக் கொண்டு அந்த இதயத்தை கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக விளையாடி வருகிறார். இன்னொரு பக்கம் சாச்சினா மற்றும் அன்சிதா இடையில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

அத்துடன் தீபக், ஆனந்திக்கு கொடுத்திருக்கும் ஒரு சின்ன டாஸ்க் மூலம் அன்சிதா கொஞ்சம் கோபமாகிவிட்டார். அதனால் அவருடைய ஹார்டை எடுத்து தீபக் இடம் கொடுக்கிறார். தீபக் வாங்க மறுத்த நிலையில் அதை தூக்கி எறிந்து விட்டு அன்சிதா அழுது கொண்டு போய் விடுகிறார். ஜெப்ரி ஆனந்தி இருவரும் சென்று சமாதானப்படுத்துகிறார்கள்.

இதனை தொடர்ந்து தீபக்கிற்கு மறுபடியும் பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்து இருக்கிறார்கள். அந்த டாஸ்கை தெரிவிக்கும் வகையில் மொத்த பிசாசுகளையும் வர வைத்து யாரை யார வேண்டுமானாலும் டார்கெட் பண்ணலாம். அவர்கள் வைத்திருக்கும் ஹார்ட்டையும் எடுத்து அதை கேமரா முன் காட்டி விட்டால் அவர்கள் அவுட் என்பதற்கு ஏற்ப ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த டாஸ்க் தெரியாத ஏஞ்சல்கள் பிசாசுகளிடம் சிக்கப் போகிறார்கள். இதுவரை உண்மையான முகத்தை காட்டாமல் இருந்த மஞ்சரி இது எனக்கான விளையாட்டு என்பதற்கு ஏற்ப பவித்ராவை வச்சு செய்கிறார். பவித்ராவும் இது வெறும் டாஸ்க் மட்டும் இல்லை என்னுடைய விளையாட்டை நான் சிறப்பாக காட்ட வேண்டும் என்பதற்கு ஏற்ப கொஞ்சம் கூட இறங்காமல் விளையாடி வருகிறார்.

Trending News