ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் சில பிரச்சனைகளின் காரணமாக பிசினஸ் ஆகாமல் முடங்கி இருந்தது. தற்போது அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் அயலான் திரைப்படத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட காட்சியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர். அதில் சிவகார்த்திகேயன் மற்றும் ஏலியன் பங்குபெறும் காட்சிகள் இருந்தது. மேலும் பிரம்மாண்டமாகவும் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையிலும் கிராபிக்ஸ் ஒர்க் செய்யப்பட்டிருந்தது.
Also read: மேடையில் அநாகரிகமாக கெட்ட வார்த்தை பேசிய மிஸ்கின்.. சைக்கோ இயக்குனருக்கு கொஞ்சநஞ்ச மானமும் போச்சு
அதனாலேயே இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெறும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே தயாரிப்பாளர் பல கோடி பணத்தை கணக்கு பார்க்காமல் செலவழித்துள்ளாராம். இதுதான் தற்போது சோசியல் மீடியாவில் ஆச்சரியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் போலி பார்ப்பதற்கு பளபளப்பாக இருந்தாலும் அசலுக்கு ஈடாகுமா என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. ஏனென்றால் என்னதான் காசை தண்ணியாக செலவழித்து இது போன்ற கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டாலும் அது வெறும் கற்பனை மட்டுமே. அது மட்டுமல்லாமல் கதையுடன் பயணிக்கும் ஒரு உணர்வும் ரசிகர்களுக்கு ஏற்படாது.
ஆனால் அதுவே எதார்த்தத்திற்காக தத்ரூபமாக எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் சூர்யாவுக்காக உருவாக்கி இருக்கும் வாடிவாசல் திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே காளை மாடுகளுடன் சூர்யா பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது.
Also read: தீபாவளி ரேஸுக்கு தயாராகும் 5 படங்கள்.. ஏலியன் துணையோடு களமிறங்கும் சிவகார்த்திகேயன்
இதற்காகவே தயாரிப்பாளர் 1.5 கோடி வரை செலவு செய்திருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து காளைகள் வரவழைக்கப்பட்டு அதை பராமரிப்பதற்கு தேவையான அனைத்து விஷயங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாடிவாசல் திரைப்படம் தாமதமானாலும் படத்திற்கு தேவையான வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதுவே வெற்றிமாறனுக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் இருக்கும் வித்தியாசமாகவும் இருக்கிறது. அதாவது இவர் தன் மனதில் நினைக்கும் எதார்த்தம் கிடைக்கும் வரை வருட கணக்கில் காத்திருந்து கூட படப்பிடிப்பை நடத்துவார். அதற்கு உதாரணம் தான் இந்த வாடிவாசல். அந்த வகையில் கற்பனையை நம்பி களமிறங்கும் சிவகார்த்திகேயன் எதிர்பார்த்த வெற்றியை பெறுவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also read: ரஜினியை உரசி பார்க்க துணிந்த சிவகார்த்திகேயன்.. நட்பை தாண்டி வரும் சங்கடம்