வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எல்லோருக்கும் முன்னிலையில் ஆடையை கழட்ட சொன்ன இயக்குனர்.. மனவேதனையுடன் நடிகை செய்த காரியம்

பொதுவாக சினிமாவுக்கு நடிக்க வந்தால் நடிகைகள் எந்த எல்லைக்கும் சென்று விடுவார்கள் என சிலர் நினைப்பதுண்டு. மேலும் ரசிகர்கள் கூட சில சமயம் நடிகைகளிடம் அத்துமீற முற்படுகிறார்கள். அதேபோல் தனக்கு நடந்த ஒரு அவமானத்தை நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.

இப்போது அந்த நடிகை யாரும் எட்ட முடியாத அளவுக்கு உயரத்தில் இருக்கிறார். கைவசம் நிறைய படங்கள், வெப் சீரிஸ் என படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். அவர் ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளாராம்.

Also Read : பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

அதாவது ஒரு படத்தில் நடிக்கும் போது ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கேட்டுக் கொண்டாராம். அதற்கு சம்மதித்து தான் நடிகையும் அந்த படத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தச் சமயத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது எல்லோர் முன்னிலையிலும் மேலாடையை கழட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னாராம்.

அதுவும் அவரது காஸ்டியூம் டிசைனரை அழைத்து மேலாடையை கழட்டி விட்டு உள்ளாடையுடன் இந்த காட்சியில் நடிக்க வேண்டும் என இயக்குனர் கூறியுள்ளார். ஏனென்றால் இப்படி நடித்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று கூறினாராம். நடிகையை சுற்றி படப்பிடிப்பில் உள்ள அனைவரும் இருந்ததால் மனம் உடைந்து போய் விட்டாராம்.

மேலும் இயக்குனருக்கு நேராகவே இதுபோன்று என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதனால் அந்த படத்தில் இருந்து நடிகையை தூக்கி விட்டு வேறு ஒரு ஹீரோயினை இயக்குனர் போட்டாராம். அதுமட்டுமின்றி அந்த ஹீரோயினை உள்ளாடை உடன் மட்டும் நடிக்க வைத்து அந்த காட்சியை எடுத்ததாகவும் நடிகை கூறியிருந்தார்.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

Trending News