செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

இயக்குனரின் வளர்ச்சியை தடுக்க நடக்கும் சதி.. வேர்ல்ட் ஹீரோவுக்கும் இதான நடந்துச்சு

Gossip: குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் பிரபலங்கள் தங்களுடைய திறமைகளை நாலா பக்கமும் விரிவு படுத்த தொடங்கி விட்டார்கள். ஒரே மொழியில் நடிக்காமல் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றனர் ஹீரோக்கள்.

அதேபோல் கோலிவுட் இயக்குனர்களும் பாலிவுட் வரை பிரகாசித்து வருகின்றனர். அப்படித்தான் தம்பி இயக்குனர் வடமாநிலத்தில் ரொம்பவும் பிரபலமாகி விட்டார்.

பெரிய தொழிலதிபரின் இல்ல விழாக்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு அவர் உயர்ந்து விட்டார். ஆனால் இது அங்கு இருப்பவர்களுக்கு சிறு புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனால் தான் இயக்குனர் தற்போது தயாரித்துள்ள பட பிரமோஷனில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். இதற்கு பலரும் கொந்தளித்த நிலையில் தம்பியே இதை டீல் செய்து விட்டார்.

வேர்ல்ட் ஹீரோவுக்கும் இதான நடந்துச்சு

ஆனாலும் இவருடைய வளர்ச்சியை தடுக்க சதி நடப்பதாக வெளிப்படையான பேச்சுக்கள் கிளம்பியுள்ளது. இப்படித்தான் வேர்ல்ட் ஹீரோவை ஓரம் கட்ட பெரிய நடிகர்கள் பல குடைச்சல் கொடுத்தனர்.

அப்படி ஒரு நிலையில் தான் இந்த இயக்குனர் இருக்கிறார். ஆனால் எப்படியும் அவர் இதை சமாளித்து விடுவார் என்கின்றனர். இருந்தாலும் இயக்குனருக்கு நடந்த அவமானம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

Trending News