வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விளம்பரம் இல்லாமல் 7 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுத்த இயக்குனர்.. நயன்தாராவின் கோல்ட் எப்படி இருக்கு? விமர்சனம்

மலையாளம் மற்றும் தமிழ் இரு மொழிகளில் காமெடி திரில்லர் படமாக உருவான கோல்ட் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். பிரேமம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ் புத்திரன் அதை தொடர்ந்து தமிழில் அவியல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

gold-movie
gold-movie

அதன் பிறகு அவர் கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதேபோன்று நயன்தாராவும் இரண்டு வருடங்களுக்கு பிறகு மலையாள திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதுவே எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் இந்த படத்திற்கு என்று பெரிதாக எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை. ஆனாலும் படத்தை பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது.

Also read: பாப் கட்டிங், ட்ரெண்டாகும் நயன்தாராவின் பள்ளிப்பருவ புகைப்படம்.. அழகுல மயங்கி விக்னேஷ் சிவன்

கதைப்படி ஹீரோ பிரித்விராஜ் ஒரு மொபைல் கடை வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு ராதா என்ற பெண்ணுடன் திருமண நிச்சயம் நடக்கிறது. இப்படி சமூகமாக போய்க் கொண்டிருக்கும் அவருடைய வாழ்க்கையில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளிவந்தார் என்பதுதான் இப்படத்தின் கதை.

gold-movie
gold-movie

இதில் சுமங்கலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாராவின் நடிப்பு அனைவரையும் கலந்துள்ளது. தற்போது இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். அதன்படி இந்த திரைப்படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், செகண்ட் பார்ட் கொஞ்சம் தடுமாறுவதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Also read: தொடர் கொலை மிரட்டல்.. மனஉளைச்சல், மாரடைப்பு மகளுடன் வெளிநாடு தப்பி சென்ற நயன்தாரா பட முரட்டு வில்லன்

மேலும் கதாபாத்திரங்களை பொருத்தவரை சரியான நடிகர்களை தான் இயக்குனர் தேர்வு செய்து இருக்கிறார். அதேபோன்று பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த வகையில் இப்படம் பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற நல்ல எண்டர்டெயின்மென்ட் திரைப்படமாக அமைந்துள்ளது.

gold-movie
gold-movie

இருப்பினும் இப்படம் பிரேமம் அளவுக்கு இல்லை என்றும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால் இப்படம் தற்போது சுமாராக இருக்கிறது என்ற கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் போக போக இந்த படத்திற்கான ரெஸ்பான்ஸ் என்ன என்பது தெரியவரும்.

Also read: தற்பெருமையில் தலைகால் புரியாமல் ஆடும் நயன்தாராவின் மாமியார்.. எல்லாம் காசு படுத்துற பாடு!

Trending News