வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கதையின் நாயகனை சாய்த்து விட்ட பாக்கியாவின் டைரக்டர்.. முடிவை நோக்கி போகும் பாக்கியலட்சுமி சீரியல்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஏற்கனவே கதைகள் இல்லாமல் அரைத்து மாவையே அரைப்பதாக சீரியல் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒரு சில கேரக்டர்களின் நடிப்பு பார்ப்பதற்கு நன்றாக இருப்பதால் தொடர்ந்து மக்கள் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதையும் கெடுக்கும் விதமாக தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது.

அதாவது பாக்யாவின் மாமனாருக்கு 80 வது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக முடித்தார். இங்கே வந்த கோபி, அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க முடியாமல் வருத்தத்துடன் திரும்பி போனார். அதற்கு காரணம் ஈஸ்வரி மற்றும் தாத்தா, இதுவரை கோபி செய்த அட்டூழியங்களை மன்னிக்க முடியாமலும் நீ திருந்தவே மாட்ட என்று சொல்லியும் கோபியை உதாசீனப்படுத்தி விட்டார்கள்.

முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்

இதனால் மனக்கவலையுடன் போன கோபி, ராதிகாவிடம் புலம்பிக் கொண்டார். இதனை தொடர்ந்து பாக்யா வீட்டில் அனைவரும் தாத்தாவுடன் இருந்து மகிழ்ச்சியாக பேசி போட்டோக்களை எடுத்துக் கொண்டார்கள். தாத்தாவிற்கு ஏதோ ஒரு விஷயம் நடக்கப் போகிறது என்பது ஒரு அறிகுறியாக தெரிந்திருக்கிறது. அதனால் வீட்டில் இருப்பவர்களிடம் அதிக நேரத்தை செலவழிக்கும் விதமாக பேசிக்கொண்டே இருந்தார்.

அத்துடன் அந்த வீட்டில் வேலை பார்க்கும் செல்வி இடமும் அக்கறையும் அன்பையும் காட்டி பேசினார். அதே மாதிரி பாக்கியாவை பார்த்து நீ ரொம்ப நல்லவ, உனக்குன்னு ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று சொல்லி தூங்க போனார். ஆனால் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் நடந்து கொண்டே இருந்தார். இதை பார்த்து ஈஸ்வரி என்னாச்சு என்று கேட்டு தூங்க அழைத்துப் போனார்.

ஆனாலும் மனசு கேட்காத தாத்தா, வீடு முழுவதும் சுற்றிப் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டு பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். பிறகு ஈஸ்வரி என்னாச்சு என்று கேட்கும் பொழுது ஒன்னும் இல்லை என்று அவரை சமாதானப்படுத்தி விட்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்தார். அடுத்த நாள் ஈஸ்வரி, பாக்யா அனைவரும் காபி குடித்துக் கொண்டே பேசிக்கொள்கிறார்கள்.

பிறகு இந்நேரம் ஆகியும் மாமா ஏன் எழுந்திருக்கவில்லை என்று பாக்யா கேட்டதற்கு ஈஸ்வரி, அவர் இரவு முழுவதும் தூங்காமல் நடந்து கொண்டே இருந்தார். அதனால் அசதி ரொம்ப இருப்பதால் தூங்கிக் கொண்டிருக்கிறார். அதனால் தான் நானும் அவரை எழுப்பாமல் தூங்கட்டும் என்று விட்டுவிட்டேன் என்று சொல்லுகிறார். ஆனாலும் ரொம்ப நேரம் ஆகியும் தாத்தா எழுந்திருக்காததால் ஈஸ்வரி போய் எழுப்பப் போகிறார்.

ஈஸ்வரி எழுப்பியும் தாத்தா எழுந்திருக்காததால் கத்தி பாக்யாவை கூப்பிடுகிறார். பிறகு பாக்கியா வந்து எழுப்பி பார்க்கிறார். உடனே பாக்யா, செழியனை கூப்பிடுகிறார். பிறகு வந்த அனைவரும் கூப்பிடுகிறார்கள். அப்பவும் எழுந்திருக்காத போது டாக்டரை வரச்சொல்லி பார்க்கிறார்கள். அங்கே வந்த டாக்டர் தாத்தா உயிர் பிரிந்து விட்டதாக சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து விட்டார்கள்.

நாடகம் தற்போது வரை கொஞ்சம் உருப்படியாக போய்க்கொண்டிருக்கிறது என்றால் தாத்தாவின் நடிப்பும் ஜெனிக்காகவும் தான் இருந்தது. அப்படிப்பட்ட கதையின் நாயகனை சாய்த்து விட்ட இயக்குனர், அடுத்த கட்டமாக இந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பிளான் பண்ணிவிட்டார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News