தொலைக்காட்சி

கொடைக்கானலில் ஒன்று சேரும் எதிர்நீச்சல் டீம்.. மருமகளுக்கு உதவும் ஜீவானந்தம்

By · 23 ஜூன் 2025
The director who raised the entire family ethirneechal. Will the shooting now be in Kodaikanal..?

Ethirneechal : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல். அடுத்தடுத்து பல எதிர்பார்ப்புகளை வைத்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. தர்ஷனின் திருமணத்தை மையமாக வைத்து தற்போதைய கதை சென்று கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாள் தான் இந்த கதை நகரும் என்ற நிலையில் தற்போது சூட்டிங் ஸ்பாட்டை கொடைக்கானலுக்கு மாற்றி இருக்கிறார் டைரக்டர்.

இனி ஷூட்டிங் கொடைக்கானலில் தானா…

காணாமல் போன தர்ஷன் கொடைக்கானல் நோக்கி சென்று கொண்டிருக்கிறான். ஏற்கனவே ஊரை விட்டு கிளம்பிய பார்க்கவியும், பார்க்கவியின் அப்பாவும் கொடைக்கானலில்தான் இருக்கின்றனர். அறிவுக்கரசியும் அடுத்து கொடைக்கானலை நோக்கி தான் பயணம் செய்வார் போல் இருக்கிறது.

சக்தியும் தர்ஷனை தேடி அடுத்ததாக கொடைக்கானலுக்கு தான் செல்வார் போல. இப்போதுதான் ஆதி குணசேகரன் அதிரடியாக இறங்கி கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் கொடைக்கானலை நோக்கி செல்வார்களா. மருமகள்கள் அனைவரும் கொடைக்கானலுக்கு செல்வதற்கு முன் தர்ஷன் யார் கைகளில் சிக்க போகிறார்.

அறிவுக்கரசியின் பிடியில் தர்ஷன் சிக்குவாரா? பார்க்கவியின் இடத்தை கண்டுபிடித்து பார்க்கவியை சென்று சந்திப்பது போலவும் அந்த இடத்தில் ஜீவானந்தம் அவர்களை காப்பாற்றுவதை போலவும் இந்த வாரம் முழுவதும் கதை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீவானந்தம் “டீம்” இறங்கியவுடன் எதிர்நீச்சல் சண்டையும், சச்சரவுமாக அதனுடன் கூடிய நல்ல கருத்தையும் முன்வைத்து நகரும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆனால் மருமகள் இந்த சிக்கலில், அவர்கள் தொழில் செய்வது முன்னேறுவதை மறந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். எனினும் ஜீவானந்தம் பொறுப்பில் தர்ஷனை ஒப்படைத்துவிட்டு மருமகள்கள் அனைத்தும் அவரவர் களத்தில் இறங்கி செயல்படுவார்களா என பார்க்கலாம்.

பொதுவாக எதிர்நீச்சல் சீரியலை பார்த்து மண்டை காய்ச்சலில் இருந்த நமக்கு தற்போது கொடைக்கானல் சூட்டிங் குளுகுளுவென்று இருக்கும் என தெரிகிறது. எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் ஒரு வேகத்துடன் இருப்பதால் வர வர சீரியல் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.