புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எண்டு கார்டு போட்டு எகத்தாளமா பண்றீங்க.. விஜய்க்கு ரிட்டயர்மென்டே கிடையாது, உடைத்து சொன்ன இயக்குனர்

Vijay: விஜய் நடிப்பு ஒரு பக்கம் அரசியல் ஒரு பக்கம் என பிசியாக இருக்கிறார் கட்சி ஆரம்பித்த கையோடு அடுத்தடுத்த நகர்வுகளின் மூலம் அவர் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டிருக்கிறார். அதிலும் மாணவர்களை இவர் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதனாலேயே அவருடைய முதல் கட்சி மாநாடை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த மாதத்தில் நடக்க இருந்த மாநாடு சில காரணங்களால் தள்ளிப் போயிருக்கிறது. இருந்தாலும் அன்றைய நாளில் பல ட்விஸ்ட் இருக்கும் என கூறுகின்றனர்.

அதே சமயம் கடந்த வாரம் அவர் நடிப்பில் வெளிவந்த கோட் நல்ல வசூல் லாபம் பார்த்து வருகிறது. அதைத்தொடர்ந்து தளபதி 69 படத்தின் வேலைகளும் ஒரு பக்கம் தீவிரமடைந்து வருகிறது. எச் வினோத் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர்.

விஜய்க்கு கதை சொன்ன சசிகுமார்

இது ஒரு பக்கம் ஆர்வமாக இருந்தாலும் இதுதான் அவருடைய கடைசி படம் என்ற வருத்தம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் விஜய் அரசியலில் களம் இறங்கினாலும் நிச்சயம் சினிமாவில் நடிப்பார் என கூறியுள்ளார்.

சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் விஜய்க்கு ரிட்டயர்மென்ட் கிடையாது. அவர் ஓய்வு பெற மாட்டார் தொடர்ந்து நடிப்பார் என்று தான் எனக்கு தோன்றுகிறது. அரசியலில் இருந்தாலும் கூட சினிமாவிலும் அவர் கவனம் செலுத்த வேண்டும் என தன் விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில வருடங்களுக்கு முன்பு சசிகுமார் விஜய்க்கு ஒரு வரலாற்று கதையை கூறி சம்மதமும் வாங்கி இருக்கிறார். ஆனால் இடையில் ஏற்பட்ட சில தடங்கல்கள் காரணமாக அந்த படம் ஆரம்பிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவாரா.?

Trending News