புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் கைவிட்டதால் விக்ரமிடம் சரணடைந்த இயக்குனர்.. சியான் வெற்றி படத்தின் பார்ட் 2

Vikram 63 Movie Update: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்து காத்திருக்கிறார்கள். ஆனால் இப்படத்தின் டைட்டில் வெளியானதில் இருந்து சில சலசலப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. அதாவது படத்தின் டைட்டில் அந்த அளவிற்கு ஹைப்பை ஏற்படுத்தவில்லை என்று ரசிகர்கள் வருத்தத்துடன் இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில் விஜய் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டு கட்சியின் பெயரை வெளியிட்டு இருக்கிறார். அதனால் இனி விஜய் அதிகமான படங்களில் நடிக்க முடியாது என்ற ஏக்கமும் ரசிகர்களிடம் இருக்கிறது. அதே நேரத்தில் விஜய் GOAT படத்திற்குப் பிறகு நடிக்கப் போகும் படம் அரசியல் படமாகவும், அதில் வரும் காட்சிகள் மக்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் கதையை தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் இவரை வைத்து இயக்குவதற்கு சில இயக்குனர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், அட்லி, எச் வினோத் மற்றும் வெற்றிமாறன் இவர்கள் பெயரும் அடிபட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி கார்த்திக் சுப்புராஜ் இந்த ரேசிலிருந்து விலகி விட்டதாக தெரிகிறது. அதற்கு பதிலாக கார்த்திக் சுப்புராஜ் விக்ரமிடம் கூட்டணி வைக்க இருக்கிறார்.

Also read: விக்ரம், சூர்யாவுக்கு நடுவே இருக்கும் மிகப்பெரிய மனக்கசப்பு.. கல்யாணத்திற்கு கூட கூப்பிடாததற்கு இதுதான் காரணம்

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மகான் திரைப்படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் விக்ரமுக்கும் சமீபத்தில் வெளிவந்த எந்த படங்களும் பெருசாக மக்களிடம் ரீச் ஆகவில்லை. அதனால் வெற்றி படமான மகான் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கு இடையில் விக்ரம் அவருடைய 62 வது படத்தை இயக்குனர் அருண்குமார் கூட்டணியில் எஸ் ஜே சூர்யா வில்லனாக கமிட் ஆகியிருக்கிறார்.

இதற்கு அடுத்தபடியாக விக்ரம் அவருடைய 63 வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் உடன் கூட்டணி வைத்து மகான் படத்தின் பார்ட் 2 நடிக்கப் போகிறார். மேலும் விக்ரமுடன், துருவ் விக்ரமும் இணைந்து கலக்கப்போகிறார். இதற்கான அப்டேட்டை கூடிய விரைவில் கார்த்திக் சுப்புராஜ் அதிகார அறிவுப்புடன் வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: 40 சதவீத படபிடிப்போடு ஒதுங்கிக் கொண்ட அஜித்.. ஹிட் படத்திற்கு உயிரை கொடுத்து நடித்த விக்ரம்

Trending News