புதன்கிழமை, ஜனவரி 8, 2025

தனுசை கழற்றிவிட்டு மாதவனுடன் கூட்டணி வைத்த இயக்குனர்.. ஸ்காட்லாண்டில் படப்பிடிப்பு

Madhavan Upcoming Movie: தற்போதைய காலத்தில் சினிமாவில் வெளிவரும் படங்களில் உள்ள கதை நன்றாக இருந்தால் மக்கள் அது யாராக நடித்திருந்தாலும் வரவேற்பு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் இப்பொழுது பல நடிகர்கள் அவர்களுடைய செகண்ட் இன்னிங்ஸில் வெற்றி பெறுவதற்கு தயாராகி விட்டார்கள். இதில் தற்போது மாதவனும் இணைந்திருக்கிறார்.

ஒரு காலத்தில் காதல் ரொமான்ஸ் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். அப்படிப்பட்ட இவர் மறுபடியும் செகண்ட் இன்னிங்ஸில் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். இவருக்கு கை கொடுக்கும் விதமாக ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் கமிட்டாகி இருக்கிறார். பெரும்பாலும் இவர் இயக்கிய அனைத்து படங்களிலும் தனுசை மட்டுமே நடிக்க வைத்திருக்கிறார்.

அந்த வகையில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை இயக்குகிறார். இப்பொழுது முதல்முறையாக தனுசை விட்டுவிட்டு மாதவனுடன் இணைந்து இருக்கிறார். மேலும் இவருடைய படங்கள் அனைத்தும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு உணர்வுபூர்வமான செண்டிமெண்ட்டை கொண்டு வந்திருக்கும்.

Also read: கொஞ்சம் கூட யோசிக்காமல் மாதவன் ஒதுக்கிய 5 ஹிட் படங்கள்.. உஷாராக டாப் இடத்தைப் பிடித்த சூர்யா

அந்த வகையில் இவர் எடுக்கக்கூடிய படமும் இது போன்ற கதையாக இருக்கப் போகிறது. இதில் மாதவனுக்கு ஜோடியாக கன்னட நடிகை சர்மிளா மாண்ட்ரே இணைந்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பழம்பெரும் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகாவும் நடிக்கப் போகிறார்கள். அத்துடன் இப்படத்திற்கு கதை எழுதப்போவது மாதவன்.

இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ள டைட்டில் “அதிர்ஷ்டசாலி”. இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாண்டில் தொடங்கி இருக்கிறது. இந்த படம் மாதவனுக்கு தமிழில் நீண்ட வருடங்களுக்கு பின் கிடைத்திருக்கும் வாய்ப்பு. ஆனாலும் பாலிவுட்டில் நடிப்பதற்கு அதிகம் ஆர்வம் இருப்பதால் அங்கேயும் பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார்.

அங்கே பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது தமிழிலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இந்த கூட்டணியில் அமைந்திருக்கும் படம் இவருக்கு மறுபடியும் தமிழில் ஒரு டர்னிங் பாயிண்ட்டை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

Also read: வெயிட்டான கதாபாத்திரத்தை மறுத்து அழும் 5 ஹீரோக்கள்.. பிரசாந்த் ரோலில் ஸ்கோர் செய்த மாதவன்

Trending News