வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கிளி போல பொண்டாட்டி இருந்தும் இயக்குனர் செய்த காரியம்.. பத்ரகாளியாக மாறிய மனைவி

இயக்குனர் ஒருவர் குடும்ப பாங்கான படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் படங்கள் திரையரங்குகளில் நீண்ட நாட்கள் ஓடி நல்ல வசூலை பெரும். இதனால் தயாரிப்பாளர்களின் விருப்பமான இயக்குனராக இருந்து வந்தார்.

திறமையான இயக்குனராக இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக்கானவர். தன்னுடைய படத்தை வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். தொடர்ந்து அவருடன் வெளியில் சுற்றுவது என இயக்குனர் பண்ணாத அழும்பே இல்லை.

வீட்டில் கிளி போல மனைவி இருந்தும் நடிகையுடன் பழகி வருகிறாரே என்று படப்பிடிப்பில் உள்ளவர்கள் அவரை கரித்துக் கொட்டி உள்ளனர். ஆரம்பத்தில் இந்த விஷயம் மனைவியின் காதுக்கு சென்ற போதும் அவர் நம்பவில்லை.

ஒருமுறை வெளிநாட்டில் பிரபல ஹோட்டலில் நடிகை உடன் இயக்குனர் இருந்து உள்ளார். இந்த விஷயம் மனைவிக்கு தெரியவரா உடனடியாக அவரும் வெளிநாட்டுக்கு சென்றார். அங்கு ஒரே ஹோட்டலில் இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நடிகையை கண்டித்த இயக்குனரின் மனைவி இதன் பிறகு தனது கணவர் பக்கம் தலை வைக்கக்கூடாது என்று கூறிவிட்டார். நடிகையும் உடன்பிறகு இயக்குனர் வழிக்கு வராமல் அக்கட தேசமே சென்றுவிட்டார்.

Trending News