திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

சூப்பர் ஸ்டாருக்கு கண்டிஷன் போட்ட இயக்குனர்.. படம் ஹிட்டாக இப்படி பண்ணனுமா? ரசிகர்கள் கேள்வி

சூப்பர் ஸ்டாருக்கு இயக்குனர் ராஜமெளலில் புதிய கண்டிசன் போட்டிருப்பதாகத் தகவல் வெளியாகிறது.

பாகுபலி 1, 2 ஆகிய படங்கள் உலகளவில் வசூல் குவித்துச் சாதனை படைத்த நிலையில், அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படமும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. எனவே இந்தியாவின் டாப் மோஸ்ட் இயக்குனராக இருக்கும் ராஜெமெளலியின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதன்படி, தெலுங்கில் பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்,டி.ஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய ராஜமெளலி, மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து எப்போது படமெடுப்பார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

மகேஷ்பாபு- ராஜமெளலி கூட்டணி

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மகேஷ்பாபு- ராஜமெளலி இருவரும் இணைந்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு முதல் நடக்கவுள்ள நிலையில், இப்படம் இந்திய சினிமாவின் பிரமாண்டமாக இருக்கும் எனவும், இப்படம் அதிக வசூல் குவித்து சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்திற்காக மகேஷ்பாபு கடுமையான உடற்பயிற்சி செய்து இதுவரை இல்லாத வகையில் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். எனவே ஆக்சன் காட்சிகள் புதுவகையில் இருக்கும் இப்படம் ஆஸ்கருக்கு செல்லும் என இப்போதே ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ராஜெமெளலியின் படங்கள் அனைத்தும் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு நடக்கும் என்பதால் இப்போதே படக்குழுவினரை ஆயத்தப்படுத்தி வருகிறார் ராஜமெளலி.

இப்படத்தில் வீர தீரனைப் போன்ற கெட்டப்பில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளதால் இப்படத்தின் கேரக்டருக்கு ஏற்ப மகேஷ்பாபு தன்னை தயார்படுத்தி வருகிறார். இப்படம் அவரது கேரியரில் பெரிய படமாக இருப்பதால் இப்படத்திற்குப் பின் மகேஷ்பாபுவும் பான் இந்தியா ஸ்டாராக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டாருக்கு கண்டிசன் போட்ட ராஜெமெளலி

இப்படத்தில் இதுவரை நடிக்காத தோற்றத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளதால், இப்படத்தின் கெட்டப்பில் பொதுவெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என ராஜெமெளலி, மகேஷ்பாபுவிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி, மகேஷ்பாபு, இப்பட ஷூட்டிங் முடிந்து படம் ரிலீஸாகும் வரையில், வெளியிலும், நிகழ்ச்சியிலும் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகிறது. இதனால் தங்கள் அபிமான நடிகரை வெளியில் அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பார்க்க முடியாதா என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ராஜமெளலில் முதன்முறையாக மகேஷ்பாபுவுடன் இணைந்து பணியாற்ற உள்ள நிலையில் இப்படத்திற்கு SSMB29 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டிற்காக ரசிகர்கள் தவமிருக்க தொடங்கிவிட்டனர்.

Trending News