வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்யின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர்.. மற்ற படங்களை ஓரங்கட்டி விட்டு தளபதிக்கு கொடுக்கும் முன்னுரிமை

The director who is going to direct Vijay’s last film: விஜய் அரசியலின் கட்சி பெயரை அறிவித்ததில் இருந்து திரும்புகிற இடமெல்லாம் இனி படங்களில் இவரை பார்க்க முடியாதா என்ற கேள்விதான். ஆனால் விஜய் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். அதாவது சட்டமன்றத் தேர்தல் எலக்சனுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருப்பதால் அதற்கு முன் ஒரு தரமான படத்தை கொடுத்து விட வேண்டும் என்று.

அது எப்படி என்றால் இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு சேர்க்க வேண்டிய கருத்தை கொண்டு சேர்க்கும் படமாக இருக்க வேண்டும். முழுக்க முழுக்க அரசியல் காட்சிகளும், நல்ல விஷயங்களையும் பதிவிட வேண்டும். அதற்கு ஏற்ற மாதிரி கதையுடன் எந்த இயக்குனர் முதலில் வருகிறார்களோ, அவர்களுக்கே கால் சீட் கொடுப்பேன் என்பதற்கு ஏற்ப தெளிவான ஒரு முடிவில் இருக்கிறார்.

இதற்கிடையில் இவருடைய கால் சீட்டுக்காக கார்த்திக் சுப்புராஜ், அட்லி போன்ற இயக்குனர்கள் வரிசை கட்டி இருக்கிறார்கள். ஆனால் தற்போது வெளிவந்த தகவலின் படி விஜய்யின் கடைசி படத்தை இவர்தான் இயக்கப் போகிறார் என்று. அதாவது தெலுங்கு மீடியா வட்டாரத்திலிருந்து இந்த ஒரு தகவல் கசிந்திருக்கிறது.

Also read: தளபதியை இயக்கும் 5 கைகள்.. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் விஜய்

விஜய் திரைப்படத்துறையில் இருந்து விடை பெறுவதற்கு முன்பு ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தன்யா தயாரிக்கும் படத்தில் தளபதி 69 படத்திற்கு கமிட் ஆக உள்ளார் என்று. அத்துடன் இப்படத்தை இயக்கப் போவது இயக்குனர் வெற்றிமாறன். இவர் ஏற்கனவே விஜய்யிடம் ஒரு கதையை சொல்லி சம்மதத்தையும் வாங்கி இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இருவரது கூட்டணியிலும் தளபதி 69 படம் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை 2 மற்றும்  வாடிவாசல் போன்ற படங்களை தற்சமயத்துக்கு நிறுத்தி வைக்கப் போகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் விஜய் இதற்கான அப்டேட்டை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: 3 இயக்குனர்களிடம் இந்த ஒரு விஷயத்தை எதிர்பார்க்கும் விஜய்.. சொல்லி அடிக்க போகும் தளபதி 70

Trending News