ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

வில்லன் மற்றும் ஹீரோ அவதாரம் எடுக்கப் போகும் இயக்குனர்.. வயிற்றெரிச்சலில் பெரிய நட்சத்திரங்கள்

இயக்குனராய் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து இன்று முன்னணி அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் நடிகராகவும் களமிறங்கியுள்ளார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இயக்குனர் தற்போது புது அவதாரம் ஒன்றை எடுக்க இருக்கிறாராம். இதுதான் தற்போது கோடம்பாக்கத்தின் முக்கிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

மின்னலே, காக்க காக்க திரைப்படத்தின் மூலம் அனைவரையும் பிரம்மிக்க வைத்த கௌதம் வாசுதேவ் மேனன் அழகான காதல் மற்றும் ரொமான்டிக் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர். அந்த அளவுக்கு காதல் படங்களை ஒருவித ஸ்டைலாக இயக்கக்கூடிய திறமை இவருக்கு உண்டு. அதனாலேயே இவருடைய படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

Also read: எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய லோகேஷ்.. வணங்கான் டிராப்பிற்கு முக்கிய காரணம் இவர் தானாம்

மேலும் அவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இப்போது அப்பட்த்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தற்போது நடிப்பில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறாராம். இதற்கு முன்பு அவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்போது விஜய்க்கு வில்லனாக அவர் நடிக்க இருப்பது தான் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விஜய் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்த படத்தில் தான் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். அவருடைய அந்த கேரக்டர் நிச்சயம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்குமாம். இதை அவரே ஒரு பேட்டியின் போது வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

Also read: வாரிசு, துணிவை விட இந்த படங்களுக்கு தான் எதிர்பார்ப்பு ஜாஸ்தியா.. 2023-னின் ஆரம்பத்திலேயே ரணகளமாகும் இணையதளம்

இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் அடுத்ததாக அவர் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறாராம். அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் கௌதம் மேனனின் ஹீரோ அவதாரம் பற்றிய அறிவிப்பு வெளிவர இருக்கிறது. ஏற்கனவே கோலிவுட்டில் புதுப்புது நடிகர்களின் வரவு அதிகமாகி இருக்கிறது இதில் கௌதம் மேனனும் போட்டிக்கு வந்துள்ளார்.

அந்த வகையில் அவர் இயக்கிய துருவ நட்சத்திரம், ஜோஸ்வா இமைப்போல் காக்கா ஆகிய திரைப்படங்கள் சில பல பிரச்சனைகளின் காரணமாக கிடப்பில் கிடக்கிறது. அதன் காரணமாகவே அவர் இப்போது நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம். தற்போது தளபதி 67 படத்தில் கமிட்டாகி இருக்கும் நிலையில் அந்த படம் வெளிவந்த பிறகு அவர் பிஸியான நடிகராக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Also read: தளபதி 67-ல் வில்லனாக களமிறங்கும் 2 இயக்குனர்கள்.. அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்ட லோகேஷ்

Trending News