திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அடி போட்ட நகுல்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கூத்து, முகத்திரையை கிழித்த இயக்குனர்

சினிமாவுல நடிக்கணும்னா அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆக வேண்டும் என்பது புது சட்டமாக இருக்கிறது. இதனாலயே பல திறமை வாய்ந்த நடிகைகள் நடிக்கும் ஆசைக்கு சமாதி கட்டி விடுகின்றனர்.

இன்னும் சிலர் சம்பந்தப்பட்டவர்களின் முகத்திரையை கிழிக்கின்றனர். ஆனாலும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் முடிவுக்கு வந்த பாடில்லை. அதன்படி தற்போது நடிகை தேவயானியின் தம்பி மீது ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது அவர் நடிப்பில் சமீபத்தில் வாஸ்கோடகாமா என்ற படம் வெளிவந்தது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட தேவயானி கலந்து கொண்டு தம்பியை வாழ்த்தி பேசினார். ஆனால் அப்படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.

இந்நிலையில் அப்படத்தில் அசோசியேட் இயக்குனராக இருந்த ஏ எம் சந்துரு, நகுல் பற்றி பல விஷயங்களை தெரிவித்துள்ளார். அதில் முக்கியமானது அவர் நடிக்க வரும் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் எதிர்பார்ப்பார்.

வாஸ்கோடகாமா படத்தில் முதலில் நடிக்க இருந்தது பவி டீச்சர் பிரிகிடா தான். டெஸ்ட் சூட் நடந்த போது அவர் தன் அப்பாவோடு வந்திருந்தார். அப்போது சில நெருக்கமான காட்சிகளையும் எடுத்தார்கள். அதன் பிறகு நகுல் இந்த பொண்ணு அட்ஜஸ்ட்மென்ட் விசயத்திற்கு சரிப்பட்டு வர மாட்டார்.

நகுல் முகத்திரையை கிழித்த இயக்குனர்

அதனால் இவரை தூக்கிட்டு சுனைனாவை நடிக்க வைக்கலாம். அவர் எல்லாத்துக்கும் சரிப்பட்டு வருவார். நான் வர சொல்றேன் என சொல்லி இருக்கிறார். அது நடக்காத நிலையில் பட பூஜைக்கு கூட நகுல் வரவில்லையாம்.

அது மட்டுமின்றி ஒரு திருமண காட்சி எடுத்துக் கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணிக்கு அசோசியேட் இயக்குனரிடம் அவர் பாதுகாப்பு கவசம் வாங்கி வர சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் எனக்கு வேலை இருக்கிறது என்று சொன்ன காரணத்தால் படத்தில் இருந்து அவரை நகுல் தூக்கி விட்டாராம்.

அதைத்தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவிற்கு கூட அவரை வர முடியாத படி செய்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது அவர் இன்னும் பல விஷயங்களை செய்திருக்கிறார். அதெல்லாம் நேரம் வரும்போது சொல்வேன்.

கோர்ட், கேஸ் என்று போகும் அப்போது நான் உண்மை அனைத்தையும் வெளிப்படுத்துவேன் என சந்துரு தெரிவித்துள்ளார். இப்படி இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு நகுல் என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற கேள்விகளும் எழுகிறது.

ஆக மொத்தம் அவர் இதற்கு விளக்கம் கொடுத்தாலும் குற்றச்சாட்டு சரி என்பது போல் ஆகிவிடும். வாயை திறக்கவில்லை என்றாலும் சர்ச்சை தான். திரையுலகில் இது போன்ற பல விஷயங்கள் வெளிவந்திருந்தாலும் அமுல் பேபி போல் இருக்கும் நகுல் இப்படிப்பட்டவரா என்ற அதிர்ச்சி தான் இப்போது பலருக்கும் இருக்கிறது.

திரை உலகில் தலைவிரித்தாடும் அட்ஜஸ்ட்மென்ட்

Trending News