சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

செஞ்ச உதவிய மறந்தா எப்படி? வாழ்க்கை கொடுத்த அஜித்தை தூக்கிய வீசிய இயக்குனர்

அஜித்குமார் நடிப்பிலும், ஸ்டைலிலும் தனது ஃபேசனுக்காக எப்படியும் இடைவிடாமல் முயற்சி செய்து அடையும் அவரது விடாமுயற்சிக்காக எப்போதும் சினிமாத்துறையினராலும், ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்படுபவர்.

கடந்தாண்டு அவரது நடிப்பில் துணிவு படம் வெளியானது. அதன்பின், அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தாமதம் செய்ததால் இப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே அடுத்தாண்டு பொங்கல் படத்துக்கு கேம் கேஞ்சர் உள்ளிட்ட படங்களுக்குப் போட்டியாக விடாமுயற்சி வெளியாகும் என தெரிகிறது. அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வரும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இப்படம் அடுத்தாண்டு மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளையொட்டி வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது சினிமாவுக்கு இடையில், ஷூட்டிங் இல்லாத நாட்களில் கார் ரேஸிலும் பைக் ரேஸிலும் ஈடுபாட்டு காட்டி வருகிறார் அஜித்.

அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஷ்ணுவர்தன்

அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை 2-3 முறை தவறவிட்டதாக பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். அஜித்தின் கேரியரில் மறக்க முடியாத பில்லா என்ற மாஸ் படத்தைக் கொடுத்தவர் விஷ்ணுவர்தன்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து, இருவரும் இணைந்து ஆரம்பம் படத்தில் இணைந்தனர். இப்படமும் ஹிட்டானது, இந்த நிலையில், அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு குறித்து விஷ்ணுவர்தன் ஒரு பேட்டியில் தெரிவித்ததாவது:

அஜித்குமார் படத்தை 2, 3 முறை மீண்டும் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தும் நான் தவறவிட்டேன். ஒருமுறை பில்லா 3 படம் எடுக்க எனக்கு அழைப்பு வந்தது. அப்போது சல்மான் கானுடன் ஒரு படம் எடுக்கும் சூழல் இருந்தது. அதனால் அதை வேண்டாம் என்றேன், மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நான் அஜித்தை வைத்து படம் இயக்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

பில்லா 3 -க்கு பிள்ளையார்சுழி!

குறும்பு படம் மூலம் இயக்குனராக அறிமுகமான விஷ்ணுவர்தன் பில்லா படத்தின் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்பட்டார். அஜித்தான் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கியதே. அப்படியிருக்க, அப்படத்தின் மூலம் பிரபலமாகிவிட்டு, தெலுங்கு, இந்திக்கு போன உடன் பழையதை மறந்த மாதிரி, அஜித் பட வாய்ப்பை நிராகரித்ததால் தான் இன்னும் அஜித் அவருக்கு வாய்ப்பு தராமல் உள்ளாரோ என்னவோ? ஆனால், பில்லா பட மேக்கிங், அஜித்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போச்சு அதனால், பில்லா 3 படம் இயக்க நிச்சயம் விஷ்ணுவர்தனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Trending News