வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

8 வயதிலிருந்தே அனுபவித்த கொடுமை.. ஜெயம் பட நடிகையை படாத பாடு படுத்திய டைரக்டர்

Jayam Ravi Movie Actress: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகை ஒருவர், வளர்ந்த பின்பு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கான காரணம் என்ன என்பதை சமீபத்திய பேட்டியில் போட்டு உடைத்தார்.

பிரபுதேவாவுடன் அள்ளித்தந்த வானம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை கல்யாணி. அதன் பின்பு இவர் ஜெயம் ரவியின் ஜெயம் படத்தில் கதாநாயகி சதாவின் தங்கையாக துரு துருவென நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமானார். இந்த படத்தில் மட்டுமல்ல ரமணா, இன்பா, கத்திக்கப்பல், இளம் புயல் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ஆனால் இவர் வளர்ந்து நடிகையாக மாறிய பின்பு திரைப்படங்களில் நடிக்க மறுத்து விஜே ஆக பணி புரிந்தார். அதன் தொடர்ச்சியாக பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர் போன்ற விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதற்கு காரணம் அவரை 8 வயதில் இருந்தே அந்தரங்க டார்ச்சல் கொடுத்திருக்கின்றனர்.

அதுவும் குழந்தை என்று கூட பார்க்காமல் ஒரு மியூசிக் டைரக்டர் அவரை தவறாக அணுகியதாகவும், தூங்கிக் கொண்டிருக்கும் போது பல விஷயங்களை தன்னிடம் செய்தார். அவர் தன்னுடைய அம்மாவின் நெருங்கிய நண்பர். அம்மா இருக்கும்போது என்னிடம் மிகவும் பாசமாக பழகுவார். அம்மா சென்ற பிறகு அங்கங்கே கை வைப்பார். என்னுடைய அம்மாவும் அவரை ரொம்பவே நம்பி தம்பி போலவே பார்த்தார்.

அம்மாகிட்ட இதைப்பற்றி சொன்னால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று அவர் இறக்கும் வரை அவரிடம் சொல்லவே இல்லை. மேலும் நான் கதாநாயகியாக நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே அது கிடைக்கும் என்று சொன்னதால், படங்களில் நடிக்க முடியாமல் போனது. இங்கு திறமைக்கு இடம் இல்லை என்று கல்யாணி அந்த பேட்டியில் தெரிவித்தார்.

இப்போது சின்னத்திரையிலும் நடிப்பதை தவிர்த்து விட்டார். கடந்த 2013ம் ஆண்டு இங்கிலாந்து சேர்ந்த மருத்துவரான ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், குடும்பம் குழந்தை குட்டி என இப்போது கல்யாணி சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார். இருப்பினும் அவருடைய திரை கனவு மட்டும் நிறைவேறாமலே போனது.

Trending News