The director who making masala films: பொதுவாக ஒரு படம் கிரிஞ்சாக இருக்கலாம், சீரியல் கிரிஞ்சாக இருக்கலாம், ஏன் நடிகர்கள் கூட கிரிஞ்சாக நடிக்கலாம். ஆனால் ஒரு இயக்குனர் கிரிஞ்சாக இருந்தால் அவர் எடுக்கக்கூடிய மொத்த படமும் அப்படித்தான் இருக்கும் என்று பெயர் வாங்கிய ஒரு இயக்குனர். தொடர்ந்து மசாலா படங்களை எடுத்ததால் தற்போது எங்கே இருக்கிறார் என்று தேடும்படியாகத்தான் அவருடைய நிலைமை இருக்கிறது.
ஆனால் அவருடைய இயக்குனர் வேலையை விட்டுவிட்டு இசை வெளியீட்டு விழா, பட பூஜை, சிறப்பு காட்சி என எல்லாத்துக்கும் முதல் ஆளாக வந்து நின்றுவார். அதற்கு காரணம் ஒரேடியாக சினிமாவை விட்டு போய்விட்டால் திரும்பி நம்மால் வந்து படத்தை எடுக்க முடியாது என்ற காரணத்திற்காக அவ்வப்போது அவருடைய முகத்தை காட்டி நான் இருக்கிறேன். கூடிய சீக்கிரத்தில் வந்து விடுவேன் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அந்த இயக்குனர் ஒரு காலத்தில் எப்படி இருந்தவர், தற்போது சினிமா வட்டாரத்தில் இவரை நக்கல் பண்ணும் அளவிற்கு தான் இவருடைய நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கிறது. அப்படிப்பட்ட இயக்குனர் வேறு யாரும் இல்லை பல ஊர்களின் பெயரை படத்தின் பெயராக வைத்து விஜய், அஜித், விஜயகாந்த் மற்றும் பரத்துக்கு சில படங்களை தொடர்ந்து கொடுத்து இயக்குனர் பேரரசு தான்.
இவருடைய கதைகளும் வசனங்களும் ஆரம்பத்தில் மக்களிடம் நல்லா வரவேற்பை பெற்றது. அதனால் தான் திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி என படங்கள் வெற்றி பெற்று வந்தது. ஆனால் தொடர்ந்து இதே மாதிரியான கதைகளையும் வசனங்களையும் கொண்டு வந்ததால் மக்களுக்கு ரொம்பவே போர் அடித்து விட்டது. அதனால் படமும் வெற்றி பெறாமல் சோதித்து விட்டது.
முக்கியமாக பரத்துக்கு பழனி, திருத்தணி என்ற படத்துக்கு பிறகு ஆளையே காணோம். ஆனால் அவ்வப்போது இயக்குனராக இல்லை என்றாலும் சில படங்களில் கேமியோ தோற்றத்தின் மூலம் தன்னை ஒரு நடிகராகவும் நிலை நிறுத்தி காட்டி வருகிறார். அந்த வகையில் சில இயக்குனர்களிடம் நடிக்கும் வாய்ப்பு கேட்டு அலைகிறார். அப்படித்தான் சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த பெட்டா ராப் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் பேரரசு நடித்துவிட்டு போனார்.
இப்படியே சில படங்களில் முகத்தை காட்டி கொண்டு வரும் இயக்குனர் ஒரு காலத்தில் எப்படி இருந்தார், ஆனால் தற்போது வீட்டில் சும்மா இருக்க முடியாமல் ஏதாவது ஒரு படத்தின் மூலம் நம்மளை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வருகிறார்.
ஆனால் இவரிடம் இருக்கும் திறமை இயக்குனராக மட்டுமில்லை ஒரு நடிகராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் பல படங்களில் மூலம் வெற்றியை கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்டவர் மறுபடியும் ஒரு நல்ல கதையுடன் இயக்குனர் என்ற பாதையில் பயணிக்க வருவார் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.