வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நிஜ புருஷன், பொண்டாட்டிய சேர்ந்து நடித்த 3 படங்கள்.. ஜோடி பிரிச்சு சகுனி வேலை பார்த்த மணிரத்தினம்

The Real husband and wife act in 3 films: நிஜ வாழ்க்கையில் புருஷன் பொண்டாட்டியாக இருக்கும் நடிகர் நடிகைகள் ஒரே படத்தில் நடிக்க வைத்தாலும், ‘உள்ளதை உள்ளது படி காட்டினால் என்ன சுவாரசியம்!’ என்று நினைத்து, அவர்களுக்கு வேற ஜோடி போட்டு பிரித்து இருப்பார்கள் அந்த படத்தின் இயக்குனர்கள். அப்படிப்பட்ட மூன்று படங்களை பற்றி பார்ப்போம்.

ராவணன்: மணிரத்தினத்தின் ராவணன் திரைப்படம் ஹிந்தியில் ராவண் என்ற டைட்டிலில் வெளியானது. இந்த ஹிந்தி படத்தில் நிஜ கணவன் மனைவியான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இருவரும் நடித்தனர். ஆனால் இந்த படத்தின் இயக்குனரான மணிரத்தினம் சகுனி வேலை பார்த்து ஐஸ்வர்யா ராய்-க்கு கணவராக விக்ரமை ராவண் படத்தில் நடிக்க வைத்தார்.

இந்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரி என்னவென்றால், ராமாயணத்தில் மறைந்திருக்கும் வாலியை கொள்வார் ராமன். ஆனா இந்த ராவணன் படத்தில் தன் மனைவியை வைத்து ராவணனை கொல்கிறார் ராமன். ஆனால் கொள்பவர் ராமன் கிடையாது, கொல்லப்படுவது ராவணனும் அல்ல என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு.

Also read: மணிரத்னத்தால் 30 வருடங்களாக புலம்பி கொண்டிருக்கும் நடிகை.. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் அம்மணி

நிஜ கணவன் மனைவிகளை படத்தில் பிரித்து வைத்த 3 இயக்குனர்கள்

காப்பான்: கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயிஷா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் தான் காப்பான். இந்த படத்தில் நிஜ புருஷன் பொண்டாட்டியான ஆர்யா, சாயிஷா இருவரும் நடித்தனர். ஆனால் இவர்கள் இருவரையும் ஜோடி சேரவிடாமல், சாயிஷாவிற்கு சூர்யாவை ஜோடி சேர்ந்து விட்டார் இயக்குனர் கே.வி ஆனந்த் .

இதுவரை மாநில அரசு மூலமாக விவசாயத்தைக் காப்பாற்றிய கோலிவுட் கதாநாயகர்களின் மத்தியில், ஒருபடி மேலே போய் மத்திய அரசின் மூலமாக சூர்யா விவசாயத்தைக் காப்பாற்றுவதே காப்பான் படத்தின் ஸ்டோரி.

இணைந்த கைகள்: என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில் அருண்பாண்டியன், ராம்கி, நிரோஷா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் இணைந்த கைகள். இந்த படத்தில் நிஜ கணவன் மனைவிகளாக மாறிய ராம்கி, நிரோஷா இருவரும் நடித்தனர். ஆனால் இந்தப் படத்தில் நிரோஷாவிற்கு புருஷன் அருண்பாண்டியன் தான் அந்த சமயத்தில் ராம்கி, நிரோஷா இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனா இருவரும் லவ் பண்ணிட்டு இருந்தாங்க.

மேலும் 90களில் புரட்சி பண்ணிய படங்களில் ஒன்றுதான் இணைந்த கைகள். இந்த படத்தில் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற பிரபாகரனை காப்பாற்ற சென்ற மேஜர் அருண்பாண்டியன் தன்னுடைய காதலியுடன் கடைசியில் சேர்வாரா? பிரபாகரன் அவருடைய தாயாரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டாரா? என்பதுதான் இந்த படத்தின் ஸ்டோரி.

இவ்வாறு இந்த மூன்று படங்களிலும் கணவன் மனைவியாக இருக்கும் நடிகர் நடிகைகளை ஜோடி சேரவிடாமல் பிரித்து வைத்து, படத்தில் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்த நினைத்துள்ளனர் இயக்குனர்கள். ஆனால் இதில் நடிகைகள் எந்த அவஸ்தையையும் படாவிட்டாலும் புருஷனாக இருக்கக்கூடிய நடிகர்கள் பொறாமையில் பொசுங்கினர்.

Also read: மணிரத்தினம் போட்ட ஆர்டர்.. கூவத்தூர் சர்ச்சைக்கு நமத்துப்போன பட்டாசாக த்ரிஷா இருக்க இதுதான் காரணம்

Trending News