சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

திருமண நாளிலேயே நடந்த விவாகரத்து.. மறுமணம் செய்து கொண்டு படுஜோராக வாழும் நடிகை

சினிமா பிரபலங்களை பொறுத்தவரையில் நிறைய விவாகரத்து செய்தி அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. ஆனால் முதல் திருமணம் சரியாக அமையவில்லை என்றாலும் அடுத்த திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் மலையாள சினிமாவில் அறிமுகமான நடிகை தமிழில் டாப் நடிகர்களுடன் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இளம் வயதிலேயே குடும்பத்தாரின் கட்டாயத்தின் பேரில் தனது உறவினரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்களுக்குள்ளேயே இவர்களது திருமண வாழ்க்கை கசப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : கர்ப்பத்தை காட்டி பணத்தை ஆட்டையை போட்ட நடிகை.. இமேஜை காப்பாற்றிக் கொள்ள திண்டாடிய நடிகர்

அதனால் இரண்டாவது ஆண்டு திருமணமான நாளிலேயே விவாகரத்து பெற்று நடிகை பிரிந்து விட்டார். அதன் பிறகு சில வருடங்கள் தனிமையில் வாழ்ந்து வந்த நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் உள்ளார். படங்களில் தனது மார்க்கெட் குறைந்த உடன் நடிகை தற்போது சீரியலில் இறங்கி உள்ளார். அதிலும் பெரும்பாலான மலையாள சீரியல்களில் நடிகை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் இவரது ரசிகர்கள் மீண்டும் இவரை வெள்ளித் திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர்.

Also Read : எக்கச்சக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் கைவிடப்பட்ட நடிகை.. பெரிய அளவில் வளர்த்துவிட்ட பாலிவுட்

வெள்ளித் திரையில் இப்போது இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றாலும் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கலாம். மேலும் இந்த நடிகை தற்போது மகிழ்ச்சியாக தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டும் வருகிறார்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொன்னதால் நைட்டு புரட்டி எடுத்த நடிகர்.. நடக்க முடியாமல் சூட்டிங் வந்த கொடுமை

Trending News