வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரு வழியா பாரதி எடுத்த டிஎன்ஏ டெஸ்ட்.. கதிகலங்க வைச்ச ரிசல்ட்

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா சொன்ன பொய்யை நம்பிய பாரதி, பத்து வருடங்களாக தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார். டாக்டராக இருக்கும் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் மூலம் தன்னுடைய குழந்தைகள் தனக்கு பிறந்தா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு சரியான சமயம் வந்திருக்கிறது.

அவர் வேலை செய்யும் மருத்துவமனையில் கணவர் ஒருவர் பிரசவமான மனைவியை சந்தேகப்படுகிறார். அப்போது பாரதி அந்த கணவரை டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்க சொல்கிறார், உடனே கண்ணம்மா, ‘ஊருக்குதான் உபதேசமா! நீங்க எப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப் போகிறீர்கள்’ என்று நக்கலாக கேட்கிறார்.

Also Read: கள்ளத்தொடர்பால் கர்ப்பிணி மனைவியை அடித்த கணவன்.. சீரியலை விட மோசமான நிஜ வாழ்க்கை

கண்ணம்மா கேட்டதும் சரி என்பதால் பாரதியும் தன்னுடைய மகள்களான ஹேமா மற்றும் லக்ஷ்மி இருவருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கின்றார். அந்த டெஸ்ட் ரிப்போர்ட்டில் பாரதிதான் அந்த குழந்தைகளின் அப்பா என்பது தெரிந்துவிடுகிறது.

இவ்வளவு நாள் கண்ணம்மாவை சந்தேகப்பட்டு கஷ்டப்படுத்தியதற்கு மனம் வருந்திய பாரதி, அவரிடம் மன்னிப்பு கேட்டு கதறுகிறார். பாரதிக்கு எல்லா உண்மையும் தெரிந்ததும் வெண்பா தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கும் அப்பா பாரதி தான் என்று கோல் போடுகிறார்.

அந்த சமயம் கண்ணம்மா, தவறு செய்யாத எனக்கு தண்டனை கொடுத்து ஒதுக்கி விலகி வைத்தீர்களே! இப்போது நீங்கள் தவறு செய்கிறீர்கள்! அதை இல்லை என்றும் மறுக்கிறீர்கள். ஆகையால் நான் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்தை இப்போது நீங்களும் பட்டு புரிந்து கொள்ளுங்கள் என்று பாரதியை திட்டிவிட்டு கிளம்புகிறார்.

Also Read: உனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா.. பாரதி சொறிஞ்சுவிட்ட கண்ணம்மா

அதன்பிறகு வெண்பா கழுத்தில் தாலி கட்ட போகும் பாரதியை ரோகித் தடுத்து நிறுத்தி, வெண்பாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான்தான் அப்பா என்று உண்மையை உடைத்து கூறுகிறார். தோழியாக இருந்து கொண்டு தனக்கு துரோகம் செய்து விட்டாய் என்று இவ்வளவு நாள் பாரதியின் வாழ்க்கையை கெடுத்த வெண்பாவை கொடூர வார்த்தைகளால் திட்டி தீர்க்கிறார்.

இனி பாரதிகண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸை நோக்கி பரபரப்பாக ஒளிபரப்பாக போகிறது. இவ்வளவு நாள் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமலே உருட்டிக் கொண்டிருந்த பாரதிகண்ணம்மா சீரியலுக்கு தற்போது என்டு கார்டு போட்டிருப்பது சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read: விஜய் டிவியின் டிஆர்பி-யை நொறுக்க சன் டிவி போட்ட பிளான்.. கைகொடுக்குமா தளபதியின் படம்

Trending News