Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

மீண்டும் இணையும் ‘டான்’ கூட்டணி! 2027-ல் தொடங்குகிறதா சிவகார்த்திகேயனின் புதிய படம்?

மீண்டும் இணையும் ‘டான்’ கூட்டணி! 2027-ல் தொடங்குகிறதா சிவகார்த்திகேயனின் புதிய படம்?

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’படம்,அவரது சினிமா பயணத்தில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது.கல்லூரிப் பின்னணியில் உருவான இப்படம்,காமெடி சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில்,இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்கரவர்த்தி இருவரும் புதிய படம் ஒன்றிற்காக மீண்டும் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.மேலும்,இப்படத்தின் படப்பிடிப்பு 2027-ஆம் ஆண்டு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.இருப்பினும்,இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


முன்னதாக,ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ‘தலைவர் 173’படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப்போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால்,அந்தப் படத்தின் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு,அவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.


இதற்கிடையில்,சிவகார்த்திகேயன் தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேயோன்’உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.ஏற்கனவே ‘டான்’படத்தின் மூலம் வெற்றிக் கூட்டணியாகத் தங்களை நிரூபித்துள்ள சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி மீண்டும் இணைந்தால், ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.இந்தக் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதுதான் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.