Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

என் முகத்தை வைத்து ஆன்லைனில்.. ச்ச அசிங்கம்.. பாவப்பட்ட ஜோனிடா

என் முகத்தை வைத்து ஆன்லைனில்.. ச்ச அசிங்கம்.. பாவப்பட்ட ஜோனிடா

Singer : ஏ.ஆர் ரகுமான் உதவியின் மூலம் “மெண்டல் மனதில்” பாடலைப் பாடி பிரபலமானவர் தான் ஜோனிடா. தற்போது தனக்கு நடந்த பாலியல் தொல்லையை பற்றி மீடியாவில் ஓப்பனாக பேசியுள்ளார். முதன் முதலில் 2013-இல் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் […]

Singer : ஏ.ஆர் ரகுமான் உதவியின் மூலம் “மெண்டல் மனதில்” பாடலைப் பாடி பிரபலமானவர் தான் ஜோனிடா. தற்போது தனக்கு நடந்த பாலியல் தொல்லையை பற்றி மீடியாவில் ஓப்பனாக பேசியுள்ளார்.

முதன் முதலில் 2013-இல் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ப்ளேபேக் பாடலில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம், குஜராத்தி என பல்வேறு மொழிகளில் பாடும் திறமை கொண்ட பாடகி ஜோனிடா காந்திக்கு பிலிம் பேர் மற்றும் மிர்சி விருதுகளும் வழங்கப்பட்டது.

மெண்டல் மனதில் பாடலுக்குப் பிறகு காற்று வெளியிடை, வேலைக்காரன், டாக்டர், பீஸ்ட் போன்ற ஹிட் படங்களில் பாடி இன்னும் பிரபலமானார் ஜோனிடா.

ஹீரோயின் வாய்ப்பு!

பாடகி ஜோனிடா தற்பொழுது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் “வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்” இன்று புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக களமிறங்கப் போகிறார். சூரரைப் போற்றுப் படத்தில் சூர்யாவுடன் நடித்த கிருஷ்ணா குமார் தான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

தனது புதிய படத்தில் கவனம் செலுத்தி வரும் ஜோனிடா இப்போது அவருக்கு நடந்த கொடுமையை பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார்.

நடந்த கொடுமை!

ஜோனிடா கூறியதாவது, “ஒரு ஆண் வலைத்தளத்தில் தனது ஆபாசமான உறுப்பை பகிர்ந்து அதன் பின் எனது புகைப்படத்தை இணைத்திருப்பது மிகவும் சங்கடமான செயல். இது வலைத்தளம் என்றாலும் இந்த செயல் ஒரு வகையில் முறைகேடு தான்”. தினமும் இது மாதிரி நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவர் தற்போது பேட்டியளித்துள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.