ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய் மீது தான் உளவுத்துறையின் முழு கவனமும்.. வெளியான பகீர் தகவல்கள்

நடிகரும் தவெக தலைவருமான விஜய் மீது தமிழக உளவுத்துறையின் முழு கவனமும் இருப்பதாக பிரபல யூடியூபர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் பிப்ரவரியில் ஆரம்பித்தார். இக்கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் இக்கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கட்சி மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி, தொண்டர்களும், நிர்வாகிகளும் மாநிலம் முழுவதும் சுவாமிக்கு நேர்த்திக் கடன், கெடா வெட்டுதல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

மற்றொருபுறம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், திராவிட கட்சிகளுக்கு விஜய்யின் தவெக கட்சியால் பாதிப்பு ஏற்படுமா? என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குக் குறிவைத்துள்ள நிலையில், இதுவரை ரசிகர் மன்றத்தையும், மக்கள் இயக்கத்தின் நலத்திட்டங்களையும் வைத்து, வார்டு கவுன்சிலர் தேர்தலில் மட்டும் வெற்றி பெற்ற இக்கட்சி எப்படி தேர்தலில் களம் காணும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புவருகின்றனர்.

அதேசமயம், ஏற்கனவே நடைபெற்ற கருத்துக் கணிப்புகளின்படி மூன்றெழுத்து பேர் கொண்ட எம்.ஜி.ஆருக்கு இருக்கும் புகழும் செல்வாக்கும் விஜய்க்கு அடுத்த தேர்தலில் இருக்கும். அதிக ஓட்டு சதவீதமும் கிடைக்கும் என இணையதளத்தில் தகவல் பரவியது. இந்த நிலையில், திமுக விஜய்யின் கட்சியை பார்த்து பயப்படுவதாகவும் கூறப்பட்டன.

இந்த நிலையில் உளவுத்துறையின் முழு கவனமும் தற்போது விஜயின் மீது தான் இருப்பதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ”தமிழ் நாட்டு உளவுத்துறையின் முழு கவனமும் தற்போது விஜய்யின் மீது தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் பிரபல அரசியல் விமர்சகர் மணி,” பெரியார் திடலுக்கு விஜய் வரப்போவதை உளவுத்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜெயலலிதா மற்றும் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் இருந்த மாதிரியாக உளவுத்துறை அதிகாரிகள் இருந்திருந்தால் இதை எப்படியாவது ஸ்மல் பண்ணி கண்டுபிடித்துச் சொல்லியிருப்பார்கள். விஜயின் மூளை ஸ்மார்ட் மூளை” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்தபோது இருந்த அதே ஆர்வமும் பரபரப்பும்தான் விஜய் கட்சி ஆரம்பித்தபோதும் இருக்கிறதென்றாலும் இதுவரை சினிமா விழாவில் மட்டுமே பேசிய வந்த விஜய், இனிமேல் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட எல்லா கட்சிகளையும் விமர்சிக்க வேண்டியிருக்கும். அதனால் அவர் அரசியல் பார்முலாவை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார்? அல்லது கூட்டணிக்கு உத்தேசம் வைத்துள்ளாரா? என்பது இனி வரப்போகிற முதல் மாநாட்டில் தெரிந்துவிடும்.

மேலும், விஜய் கட்சி ஆரம்பித்து, சில மாதங்களே ஆகும் நிலையில், அவருக்கு அரசியல் அனுபவம் இருக்கிறதா? இல்லையா? என்பதைத்தாண்டி, முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களைத் தாண்டி விஜயை கண்காணிக்க என்ன காரணம்? அவரது சினிமா செல்வாக்கா? என்று நெட்டிசன்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News