செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

பிக் பாஸ் வீட்டில் நுழையும் இந்த சீசனின் வெளியேறிய போட்டியாளர்.. ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது 90 நாட்களைக் கடந்து இன்னும் ஒரு சில வாரத்தில் நிறைவடையுள்ளது. இதனால் காரசாரமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்து முடிந்த மற்ற சீசன்களின் சுவாரசியமான போட்டியாளர்கள் என்ட்ரி கொடுக்கின்றனர்.

அதிலும் கொளுத்திப் போடும் வேலையை வனிதாவிற்கு பிறகு கச்சிதமாக செய்த சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் நுழைந்து இருக்கிறார். இவர் வந்த உடனேயே இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக ரசிகர்கள் யூகித்த விக்ரமனை வச்சு செய்கிறார்.

Also Read: ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. 14 நாட்களுக்கு இவ்வளவா?

இதனால் நிகழ்ச்சி முன்பை விட சூடு பிடித்திருக்கிறது. ஆகையால் சுரேஷுக்கு பின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக இருக்க வேண்டும் என நினைத்த டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து நாளை வருகை தருகிறார்.

இவர் முதல் ஆளாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வெகு சீக்கிரமே வெளியேறினார். இதனால் ஜிபி முத்துவின் மீது எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்ததால் மறுபடியும் அவர், ஒரு வாரம் கெஸ்ட் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நாளை நுழைகிறார்.

Also Read: ஜிபி முத்துவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த விஜய் டிவி.. வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறது சீசன் 4

ஆகையால் ஜிபி முத்து என்ட்ரி கொடுத்தபின் ஜாலியாக மாறப்போகும் பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மேலும் ஜிபி முத்துவை போல் தனலட்சுமியும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

அத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தால் ஜிபி முத்து சம்பாதிப்பதை விட அவர் நிறைய படங்களில் கமிட்டாவது மட்டுமல்லாமல் புது வீடு கட்டி குடியேறினார். இந்த சூழலில் ஜிபி முத்துவை மறுபடியும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வைத்து டிஆர்பி-யை ஏற்ற விஜய் டிவி பிளான் போட்டு இருக்கிறது.

Also Read: சாண்டி மாஸ்டருடன் இணைந்த ஜிபி முத்து.. குத்தாட்டம் போட வைத்த வீடியோ

Trending News