சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

உண்மை தெரியாமல் ஆக்ரோச பட்ட கேப்டன் விஸ்வாசிகள்.. ஒரு வருடமாக விஜய்யை நெருங்க விடாத காரணம்!

The family did not let Vijay try to see Vijayakanth: நேற்று விஜயகாந்த் நுரையீரல் அலர்ஜி காரணமாக திடீரென்று மரணம் அடைந்தார். இவருடைய இழப்பால் தமிழகமே மிகுந்த கலக்கத்தில் இருக்கிறது. கேப்டனின் உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார். அண்ணன் தம்பி போல் தான் இவர்களது உறவு இருந்தது. அண்ணனை இழந்து விட்டேனே என்று விஜய் விஜயகாந்தின் உடல் இருந்த பெட்டியின் மீது தலையை வைத்து அங்கேயே அழுதுவிட்டார். அப்படியே உடைந்து போய் கேப்டனின் முகத்தை பார்த்துக்கொண்டே உறைந்து போய் நின்றார். இந்த நிகழ்வு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது.

ஆனால் கேப்டனின் விசுவாசிகளுக்கு, விஜயகாந்த் முடியாமல் இருந்தபோது பார்க்க வராமல் இருந்ததற்கும், இறந்த பின் ரொம்ப நேரம் கழிச்சு வந்ததற்கும் விஜய் மீது கோவப்பட்டனர். அதனால் ‘வெளியே போ’ என்று விஜய்க்கு எதிராக முழக்கமிட்டு செருப்பை விட்டு எறிந்தனர். இன்னைக்கு கோஷம் போடுற அந்த ரசிகர்கள், தளபதியை பற்றிய உண்மை தெரியாமல் இருக்கிறார்கள். ஏற்கனவே பலமுறை விஜயகாந்தை பார்க்க துடித்தும் பார்க்க மறுத்துள்ளனர் குடும்பத்தினர். இந்த உண்மை தெரியாமலே ரசிகர்கள் ஆவேசப்படுவதாக திரை விமர்சகர் அந்தணன் சமீபத்திய பேட்டியில் மொத்த சீக்ரட்டையும் போட்டுடைத்தார்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக விஜய் எப்படியாவது விஜய்காந்தை நேரடியாக சந்தித்து பேசி விட வேண்டும் என முயற்சித்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் கேப்டனின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அந்த சமயத்தில் விஜயகாந்த் சிகிச்சையில் இருந்ததால், விஜய் வந்து பார்த்தால் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் வரிசையாக வருவார்கள் என்று தட்டி கழித்து விட்டனர். விஜய் மட்டுமல்ல கேப்டனின் நெருங்கிய நண்பரான ராதாரவியும் பலமுறை விஜயகாந்தை சந்திக்க வேண்டும் என அவருடைய குடும்பத்திடம் கெஞ்சி கேட்டு இருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட அவர்கள் அனுமதி தரவில்லை என ராதாரவி சமீபத்திய பேட்டியில் கூட கூறினார்.

Also Read: கேப்டனின் வீழ்ச்சிக்கு இந்த ரெண்டு பெண்களின் சதி, பேராசை மட்டுமே காரணம்.. பரபரப்பு கிளப்பிய பிரபலம்

விஜய்யை நெருங்க விடாத காரணம்

இந்த விஷயம் தெரியாத கேப்டன் விசுவாசிகள், அண்ணனின் முகத்தை கடைசியாக பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என்று வந்த விஜய்யை வெளியே போ என்று கோஷம் போட்டு அவமானப்படுத்தினர். இருந்தாலும் விஜய் அதையெல்லாம் பெருசுபடுத்தவில்லை. ஒரு காலத்தில் சினிமா உலகில் விஜய்க்கு எல்லாமுமாய் கேப்டன் தான் இருந்தார். விஜயகாந்த் நடித்த ‘வெற்றி’ என்ற படத்தில் தான் தளபதி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களின் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது.

அதுமட்டுமல்ல செந்தூரப் பாண்டியன் என்ற படத்தில் கேப்டன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து, விஜய்யை தூக்கி விட்டார். இவ்வளவு எல்லாம் பண்ணிய கேப்டனை விஜய் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார். விஜய் பலமுறை கேப்டனை சந்திக்க முயற்சித்தும் அவர்களது குடும்பம் தான் அனுமதி அளிக்கவில்லை என்று கேப்டனுக்கு இரங்கல் தெரிவித்த எஸ்ஏ சந்திரசேகரும், அந்தணன் சொன்ன இதே விஷயத்தை குறிப்பிட்டிருந்தார்.

Also Read: இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் நன்றி கெட்ட நடிகர்.. செய்நன்றி மறந்தால் இப்படித்தான்

Trending News