வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வாரிசை அழிக்க திட்டம் திட்டிய குடும்பம்.. சந்தியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

விஜய் டிவியில் பிரபல தொடரான ராஜா ராணி 2 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் சிவகாமியின் இளைய மகன் ஆதியால் கர்ப்பமான ஜெசி தற்போது ஆதியை திருமணம் செய்து கொள்ள போராடி வருகிறார். இதற்கு உறுதுணையாக சந்தியா மற்றும் சரவணன் உள்ளனர்.

இந்நிலையில் ஜெசியின் பெற்றோர் என்ன விஷயம் என்று சொல்லாமல் ஜெஸ்ஸியை வலுக்கட்டாயமாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் ஜெசிக்கு சிறிது சந்தேகம் வருகிறது. ஜெசியை வெளியிலேயே விட்டுவிட்டு அவரது பெற்றோர் மட்டும் மருத்துவரை சந்திக்கின்றனர்.

Also Read : தீவிரவாதிகளால் பதட்டத்தில் நர்சுகள்.. பல்ஸ் கூட பிடிக்கத் தெரியாத பாரதி செய்யப்போகும் ஆப்பரேஷன்

அப்போது ஜெசி தன்னுடன் வந்திருக்கும் மற்றொரு பெண்ணை விசாரிக்கும் போது மூன்றாவது முறையாக கருத்தரித்ததால் அபாஷன் செய்ய வந்துள்ளதாக கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெசி உடனே சந்தியாவுக்கு போன் செய்து ஹாஸ்பிடலுக்கு வர சொல்கிறார்.

முதலில் ஜெஸ்ஸியை சாதாரண செக்கப் என்ற சொல்லி பரிசோதனை செய்கிறார். அதன் பின்பு ஜெசியை வெளியே நிற்க சொல்லிவிட்டு அவரின் பெற்றோர் மருத்துவரிடம் பேசுகின்றனர். அந்த சமயத்தில் நல்ல வேலை இப்போது அழைத்து வந்தீர்கள், ஒரு மாதம் ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறுகிறார்.

Also Read : இனியாவை வைத்து டபுள் கேம் ஆடும் கோபி.. பாக்கியாவுக்கு பிடித்த பைத்தியம்

உடனே சந்தியா வந்து ஐபிஎஸ் போல மருத்துவரிடம் பல கேள்விகள் கேட்கிறார். யாரைக் கேட்டு கருவ கலக்கிறீங்க என சத்தம் போடுகிறார். அதன் பின்பு மருத்துவர் இது அந்த மாதிரி ஹாஸ்பிடல் இல்லை என சொல்லுகிறார். அப்போது தான் தெரியுது ஜெஸ்ஸியின் செக்கப்புக்காக பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளனர்.

ஏற்கனவே ஜெஸின் அம்மாவிற்கு முதல் குழந்தை கலைந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக ஜெசிக்கா இது போல் எதுவும் ஆயிடக் கூடாது என்பதற்காக பரிசோதனை செய்ய அழைத்து வந்துள்ளனர். அப்போது ஜெசி தனது பெற்றோரை புரிந்து கொள்கிறார். சந்தியாவும் கண்டிப்பாக ஆதியுடன் ஜெஸ்ஸிக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறார்.

Also Read : குரளி வித்தை பலிக்கல, இப்ப அடுத்த வித்தை காட்டும் கதிர்.. ரணகளமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Trending News