சினிமாவில் பேரும், புகழுடன் இருக்கும் அந்த நடிகருக்கு தனிப்பட்ட வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனைகளும், சிக்கல்களும் வந்து கொண்டே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட அந்த நடிகரின் மேல் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தது.
பெரிய இடத்தை பகைத்துக் கொண்டதால் நடிகரின் சினிமா எதிர்காலமும் ஆட்டம் காணும் நிலைக்கு வந்தது. தற்போது அதையெல்லாம் தகர்த்தெறிந்து மிகப் பெரிய வெற்றியை கொடுத்திருக்கும் அந்த நடிகர் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
Also read:மீண்டும் பழைய சித்து வேலையை ஆரம்பித்த காமெடி நடிகர்.. தலை தெறிக்க ஓடும் தயாரிப்பாளர்கள்
இந்நிலையில் நடிகரின் குடும்பம் அவருக்கு இரண்டாவது திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறதாம். வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையில் இன்னொரு திருமணம் வேண்டாம் என்று நடிகர் பிடிவாதமாக மறுத்து விட்டாராம். ஆனாலும் சினிமா மட்டும் போதுமா, உனக்கொரு வாழ்க்கை வேண்டாமா என்று அவருடைய குடும்பம் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறதாம்.
இதனால் கடுப்பான நடிகர் இனிமேல் என் திருமணத்தை பற்றி பேசினால் உங்கள் உறவே வேண்டாம் என்று ஒதுங்கி விடுவேன் என்று தன் குடும்பத்தினரை கடுமையாக எச்சரித்து விட்டாராம். விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு பல அவமானங்களை சந்தித்து வரும் அவர் தன் முன்னாள் மனைவியை வேற லெவலில் பழிவாங்க முடிவெடுத்துள்ளாராம்.
Also read:காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி.. அவசரப்பட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்ட சோகம்
அதாவது இந்த விவாகரத்தால் தன்னுடைய கெரியரையே காலி செய்ய நினைத்த மனைவியின் குடும்பத்திற்கு முன் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற தீவிர வெறியோடு அவர் இருக்கிறாராம். அதை சினிமாவின் மூலம் தான் செய்ய வேண்டும் என்ற முடிவிலும் அவர் இருக்கிறார்.
அதனால் தான் அவர் மீண்டும் டைரக்ஷன் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஒரு தரமான வெற்றி படத்தை இயக்கி தன் மனைவியை பழிவாங்க அவர் துடித்துக் கொண்டிருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
Also read:காசுக்காக படுக்கையை பகிர சொன்ன நடிகையின் அம்மா.. பாதுகாப்பாக அரவணைத்த பிரபலம்!