விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் சந்தியாவிற்கு அவருடைய கணவர் சரவணன் உறுதுணையாக இருந்தாலும், சந்தியாவின் மாமியார் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். இன்னிலையில் சந்தியாவின் குடும்பம் மட்டுமல்லாமல் தென்காசியில் இருக்கும் மக்கள் அனைவரும் போலி சாமியார் கையில் சிக்கி இருக்கின்றனர்.
இதை ஏற்கனவே அறிந்த சந்தியா அந்த போலிச்சாமியார் அரசுக்கு சொந்தமான நிலத்தில் மக்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறித்து கோயில் ஒன்றை கட்டப் போவதாக திட்டமிட்டு அதற்காக மக்களிடம் பணம் வசூலிக்கிறார். இன்னிலையில் சிவகாமி தான் அந்தக் கோயில் எழுப்புவதற்கான முதல் கல்லை எடுத்துக் கொடுத்து துவங்கி வைக்கிறார்.
அப்போது சந்தியா போலீசாரிடம் அந்த போலிச்சாமியாரின் நடவடிக்கையை ஆதாரத்துடன் அளித்து கையும் களவுமாக மாட்டி விட்டு கைது செய்ய வைத்துள்ளார். இருப்பினும் சந்தியா செய்வது சரி என்பதை ஏற்க மறுக்கும் குடும்பம், ‘பழிபாவத்தை தங்களது குடும்பத்திற்கு கொண்டு வந்து சேர்க்காதே, ஒழுங்காக போய் சாமியாருக்கு எதிராக கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு’ என சந்தியாவின் மாமியார் சந்தியாவை குற்றவாளி போல் நடு வீட்டில் நிற்க வைத்து திட்டுகிறார்.
அதுமட்டுமின்றி சந்தியா 3 முறை தொடர்ந்து தவறு செய்தால் ஏற்றி வைக்கப்பட்ட மூன்று விளக்குகளில் ஒவ்வொரு விளக்காக அணைக்கப்படும். இறுதியாக 3 விளக்குகளும் அணைந்து விட்டால் போலீஸ் கனவை மறந்து விட வேண்டும் என சந்தியாவிற்கு ஏற்கனவே அவருடைய மாமியார் எச்சரிக்கை விடுத்தார்.
தற்போது சந்தியா அந்தப் போலிச்சாமியாருக்கு எதிராக புகார் அளித்ததால் சிவகாமி ஒரு விளக்கை அணைத்து விடுகிறார். மேலும் அர்ச்சனாவும் சிவகாமிக்கு கோபத்தை ஏற்றும் வகையில் சைடில் ஒத்து ஊத, சரவணனை தவிர வீட்டில் இருக்கும் மற்றவர்களும் சந்தியா செய்வது தவறு போன்று தான் தெரிகிறது.
இருப்பினும் போலீஸ் விசாரணையில் அந்த போலிச்சாமியாரின் முகத்திரை கிழிக்கப்பட்டு, சந்தியா இந்த ஊர் மக்களுக்காக நல்லது செய்ததை அறிந்த சிவகாமி தன்னுடைய முடிவை மாற்றி மீண்டும் விளக்கை ஏற்ற போகிறார். இது வழக்கம் போல் நடப்பது தானே என சீரியல் ரசிகர்கள் சளிப்படைந்துள்ளனர்.