புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பாக்யா பழனிச்சாமியை ஒன்று சேர்க்க முயற்சி பண்ணும் குடும்பம்.. வயித்தெரிச்சலில் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவின் இரண்டு மகன்களின் குடும்ப பிரச்சினையை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து சாதித்துக் காட்டிவிட்டார். இருந்தாலும் பாக்யாவின் மாமியார் எழிலுக்கும் அமிர்தாவிற்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று ஜாடமடையாக பேசி வருகிறார்.

ஆனாலும் எழில் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நிலா பாப்பா மட்டும் நமக்கு போதும் என்று அமிர்தாவிடம் சொல்லிவிட்டார். அடுத்ததாக ஜெனி மற்றும் செழியன் வாழ்க்கை சந்தோசமாக ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

இருந்தாலும் ஜெனி இந்த முறை சூதனமாக இருந்து கொள்ள வேண்டும் என்று செழியன் மீது ரொம்பவே சந்தேகப்பட்டு வருகிறார். அந்த வகையில் செழியன் போன் பேசினால் யாரிடம் பேசுகிறாய், யாருக்கு மெசேஜ் பண்ணுகிறாய் என்று கேள்வி மேலே கேள்வி கேட்டு வருகிறார்.

செழியன் மீது சந்தேகப்படும் ஜெனி

போதாததற்கு செழியனிடமிருந்து போன் வாங்கிக் ஒவ்வொன்றாக செக் பண்ணிக் கொண்டு இருக்கிறார். பிறகு ஆபீஸ்க்கு போகும்பொழுது எங்கே போகிறாய் எப்பொழுது வருவாய் என்று கேட்கிறார். இதை பார்த்து கொஞ்சம் கடுப்பான ஈஸ்வரி, ஜெனி இடம் நீ ஓவராக தான் என் பேரனை அசிங்கப்படுத்துகிறாய் என்று சொல்கிறார்.

இதையெல்லாம் பார்த்த பாக்யாவிற்கு, செழியன் மீது ஜெனிக்கு சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. இது இன்னும் எங்க போய் முடியப் போகிறதோ என்று மனதிற்குள் நினைக்கிறார். இதனை தொடர்ந்து செல்வி அக்கா, எழிலிடம் பாக்யாவிற்கும் பழனிச்சாமிக்கும் திருமணத்தை நாம் பண்ணி வைக்கலாமா என்று கூறுகிறார்.

அதற்கு எழில் ஏற்கனவே இதைப்பற்றி ஒரு முறை என் அம்மாவிடம் பேசி அடி வாங்கினது தான் மிச்சம். மறுபடியும் இதே தப்பை நான் பண்ண முடியாது என்று சொல்கிறார். அதற்கு செல்வி அக்கா நீங்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது அக்காவுக்கும் ஒரு துணை வேண்டும். அதனால் மறுபடியும் பேசி இதற்கு ஒரு முடிவு பண்ணுங்க என்று கூறுகிறார்.

உடனே எழிலும் அப்படி சொல்றீங்களா சரி முயற்சி எடுத்துப் பார்ப்போம் என்று கூறிவிட்டார். அடுத்ததாக பழனிச்சாமி அம்மாவும் பாக்யாவுடன் மகனுக்கு எப்படியாவது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதன்படி ஒவ்வொரு முயற்சியாக எடுக்கப் போகிறார்.

இப்படி பாக்கியாவின் குடும்பத்தில் இருக்கும் மகன்களும், பழனிச்சாமியின் அம்மாவும் சேர்ந்து இவர்களை எப்படியாவது ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என்று அடுத்த கட்ட முயற்சியை பண்ணப் போகிறார்கள். இதை எல்லாம் தெரிந்தால் கோபிக்கு வயிற்றெரிச்சலில் ஓவராக கொந்தளிக்க போகிறார்.

அதாவது கோபி மட்டும் ஆசைப்பட்ட ராதிகாவுடன் சந்தோஷமாக குடும்பத்தை நடத்தலாம். வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்ட போன பாக்யா மட்டும் வேறு யாருடனும் சேர்ந்து விடக்கூடாது என்ற வக்கிர புத்தியில்தான் சுற்றிக் கொண்டு வருகிறார்.

கடைசியில் முடியும் தருவாயில் பாக்யா மற்றும் பழனிச்சாமியின் பிரண்ட்ஷிப் தொடர்கிறதா அல்லது குடும்ப வாழ்க்கையில் இணைந்து துணையாக இருக்கப் போகிறார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News