சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஈஸ்வரி செய்த சதியால் கோபியுடன் ஒன்று சேரும் குடும்பம்.. பாக்கியாவிடம் பொறுப்பை ஒப்படைத்த ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபிக்கு நெஞ்சுவலி வந்ததால் பாக்யா கூட்டிட்டு வந்து ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ராதிகா பதட்டத்துடன் கோபியை பார்ப்பதற்கு ஹாஸ்பிடலுக்கு வருகிறார். ஆனால் ஈஸ்வரி, நீ என் மகனை பார்க்க கூடாது, ஹாஸ்பிடல் வரக்கூடாது என்று வெளியே போக சொல்றார்.

அத்துடன் இனி என் மகன் வாழ்க்கையிலையும் தலையிடாத, நீ வந்ததுக்கு பிறகு தான் என் மகனுக்கு இரண்டு தடவை உடம்பு சரியில்லாமல் இந்த மாதிரி ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கிறான். அதனால் இனி அவனுடைய வாழ்க்கைக்கு நீ தேவையே இல்லை. நான் இருந்து எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன். அவன் கண் முழிக்கும்போது உன்னை பார்க்க கூடாது என்று வாய்க்கு வந்தபடி ராதிகாவை திட்டி கொடூரமாக ஈஸ்வரி நடந்து கொள்கிறார்.

இதனை பார்த்த பாக்கியா, மாமியார் வாயை அடைப்பதற்காக எவ்வளவோ முயற்சி எடுக்கிறார். ஆனாலும் யார் பேச்சையும் கேட்காத ஈஸ்வரி, ராதிகாவை புண்படுத்தி பேசி விட்டார். பிறகு எழில் நீங்க இப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அப்பா கண் முழிக்கும் போது உங்களால் பார்க்க முடியாது. ஏனென்றால் இங்கே கத்தி சண்டை போட்டு பேசுபவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்று பயமுறுத்திய பிறகு ஈஸ்வரி வாயை மூடிக்கொண்டார்.

பிறகு ராதிகா, பாக்யா, ஈஸ்வரி என அனைவரும் கோபி ரூமுக்கு வெளியே இருந்து வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ரூமில் இருந்து வெளிவந்த நர்ஸ் இடம் கோபி எப்படி இருக்கிறார், நான் டாக்டரை பார்த்து பேச வேண்டும். கோபி உடல்நிலை பற்றி நான் கொஞ்சம் கேள்வி கேட்கணும் என்று ராதிகா சொல்கிறார். அதற்கு அந்த நர்ஸ் பார்வையாளர்களிடம் டாக்டர் பேச மாட்டார்கள்.

நீங்கள் என்ன தெரிந்து கொள்ள நினைக்கிறீர்களோ, அதை அவங்க குடும்பத்தில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நாங்கள் எல்லா விஷயத்தையும் அவர்களிடம் சொல்லி இருக்கும் என்று சொல்கிறார்கள். அப்பொழுது வந்த இன்னொரு நர்ஸ் கோபிக்கு தேவையான மாத்திரைகளை வாங்கிட்டு வர சொல்கிறார்கள். உடனே இன்னொரு நர்ஸ், இவங்க இல்ல, பாக்கியா தான் மனைவி என்று சொல்லியதும் ராதிகாவின் முகம் அப்படியே வாடிப் போய்விட்டது.

எதுவும் பதில் சொல்ல முடியாமல் ராதிகாவும் தூரமாக விலகி போய் நின்று விடுகிறார். ஆனாலும் ஈஸ்வரி விடாமல் ராதிகாவிடம் சென்று என் மகன் நல்லா இருக்கணும் என்று நினைத்தால் இங்கிருந்து போய் விடு. உன் முகத்தைப் பார்த்தால் என் மகனுக்கு ஏதாவது ஆகிவிடும் என்று மோசமாக பேசி ராதிகாவின் மனசை புண்படுத்தி விட்டார். ஈஸ்வரி இந்தளவிற்கு மோசமாக நடந்து கொள்வதால் ராதிகா எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு வெளியேறுகிறார்.

உடனே பாக்கியா, ராதிகாவை சமாதானப்படுத்துவதற்காக பின்னாடி போய் பேசுகிறார். அப்பொழுது கோபிக்கு எதுவும் ஆகாது நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து விட்டது. நீங்கள் எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம், அத்தை சொல்வதை மனதில் வச்சுக்க வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும் என்று சமரசம் செய்ய பார்க்கிறார். ஆனால் ராதிகா, நீங்க எல்லாம் ஒரே குடும்பமா ஆயிட்டீங்க.

நான் இப்பொழுது தனிமரமாக நிற்கிறேன் என்று ரொம்பவே பீல் பண்ணி சொல்லி ஹாஸ்பிடலில் இருந்து கிளம்புகிறார். அத்துடன் நீங்களே எல்லாமே பக்கத்துல இருந்து பார்த்துக்கோங்க நான் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று பாக்யாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ராதிகா வீட்டிற்கு போகிறார்.

Trending News