சினிமாவில் தற்போது ஹீரோ, குணச்சித்திரம் என்று பல கேரக்டர்களில் கலக்கி வரும் சத்யராஜ் ஆரம்ப காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி அவர் வில்லன் கேரக்டரில் நடிக்கும் போது ஒரு நடிகர் படப்பிடிப்பில் அவரை உண்மையாகவே அடித்திருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் மூலம் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது. அவர் ஒரு பேட்டியில் இதை பற்றி விரிவாக கூறியிருக்கிறார். அதாவது டி ராஜேந்தர் ஒரு இயக்குனராக பிரபலமாக இருந்த காலகட்டம் அது.
அப்போது அவர் இயக்கத்தில் தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா போன்ற திரைப்படங்கள் சத்யா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. இந்த இரண்டுமே டி ராஜேந்தரின் சொந்த திரைப்படங்கள். இந்த திரைப்படங்கள் இரண்டும் வெளியாகி அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்து அவரை ஒரு முன்னணி இயக்குனராக மாற்றியது.
தங்கைக்கோர் கீதம் படத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருந்தார். அப்போது ஒரு சண்டைக் காட்சியில் டி ராஜேந்தர், சத்யராஜை அடிப்பது போன்று எடுக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியை ஜுடோ ரத்தினம் அவர்கள் மிகவும் பக்குவமாக எப்படி அடிக்கவேண்டும் என்று டி ராஜேந்தருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
அவரும் அதை அப்படியே கேட்டிருக்கிறார். ஆனால் ஷாட் எடுக்கும் போது அவர் உண்மையாகவே சத்யராஜை வயிற்றில் மாறி மாறி குத்தி இருக்கிறார். அவரின் இந்த தாக்குதலை எதிர்பாராத சத்யராஜ் ரொம்பவும் நிலைகுலைந்து போய் இருக்கிறார்.
வலி தாங்க முடியாத அவர் டி ராஜேந்தரை அந்த இடத்திலேயே மாஸ்டர் சொல்லிக் கொடுத்தபடி நடிக்க முடியாதா, எதற்காக இப்படி அடிக்கிறாய், நானும் மனிதன் தானே என்று சில கெட்ட வார்த்தைகளையும் கலந்து திட்டி இருக்கிறார். அதன் பிறகு அவர் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
பிறகு இரண்டு நாட்கள் வரை அவர் படப்பிடிப்புக்கே வரவில்லையாம். தன்னால் தான் அவர் கோபமாக இருக்கிறார் என்று அறிந்த டி ராஜேந்தர், சத்யராஜை நேரில் சென்று சமாதானப்படுத்தி மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்து வந்திருக்கிறார். தற்போது இந்த சம்பவத்தை மாஸ்டர் ஜூடோ ரத்தினம் அவர்கள் ஒரு பேட்டியில் மிகவும் கலகலப்பாக தெரிவித்திருக்கிறார்.