தமிழ் சினிமாவில் ராஜா ராணி2 படத்தின் மூலம் அறிமுகமான அட்லி, அதன்பிறகு தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது பாலிவுட் நடிகர்களை இயக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார். அட்லி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி ரிலீஸ் செய்வதற்காக மும்முரமாக தயாராகிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஆனால் நயன்தாராவிற்கு முன்னதாக இந்த கேரக்டரில் நடிப்பதற்காக சமந்தாவை தான் அட்லி அனுப்பி இருக்கிறார். அப்போது சமந்தா நாக சைத்தன்யா உடன் திருமண பந்தத்தில் இருந்த நிலையில், சமந்தாவின் நடிப்பிற்கு முழு சுதந்திரம் இல்லாததால் தெளிவான முடிவை சமந்தாவால் எடுக்க முடியவில்லை.
அதனால் ஜவான் படத்தில் சமந்தாவால் நடிக்க முடியாமல், அந்த வாய்ப்பு அவரை விட்டு கை நழுவி உள்ளது. நீண்ட நாட்களாக காதலித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது திருமணம் முடித்திருக்கும் நிலையில், நயன்தாரா இன்னும் ஒரு சில வாரத்தில் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார்.
நயன்தாராவிற்கு இந்த படம் நல்ல சாய்ஸ் என்றாலும், ஏற்கனவே பாலிவுட்டில் பிரபலமாக உள்ள சமந்தா மட்டும் இந்த கேரக்டரில் நடித்த இருந்தால் இன்னும் ஜவான் திரைப்படம் சிறப்பாக அமைந்திருக்கும். இந்தப் படம் தன்னை விட்டு கை நழுவி சென்றிருக்கிறது என சமந்தா துளி கூட கவலைப்படவில்லை.
மேலும் விவாகரத்துக்குப் பிறகு சுதந்திரமாகவும் அவருடைய இஷ்டப்படி எந்த கேரக்டரில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கும் சமந்தா இனி வரும் நாட்களில் பாலிவுட்டில் அவரைப் பார்க்கலாம்.
தற்போது சமந்தா விஜய் தேவாரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்தபடியாக விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி விஜய்யின் 67-வது படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.