
Gossip: அக்கட தேசத்து நடிகரை காதலித்து ஆசை ஆசையாய் திருமணம் செய்து கொண்டார் அந்த நடிகை. பெரிய குடும்பத்து மருமகளானாலும் நடிப்பை விட்டு விடாமல் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஆனால் அதுவே குடும்ப பிரச்சனைக்கு காரணம் ஆகி இன்று விவாகரத்து செய்துவிட்டு சிங்கிளாக இருக்கிறார். ஆனால் நடிகையின் முன்னாள் கணவரோ இரண்டாம் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இதனால் நடிகைக்கு ஆதரவாக ரசிகர்கள் பேசி வந்தனர். நடிகைக்கும் இந்த வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
ரகசிய நிச்சயதார்த்தம் செய்த நடிகை
முன்னாள் கணவரை வெறுப்பேத்தும் விதமாக மாடர்ன் போட்டோ சூட் செய்து வந்தார். அதேபோல் பிரபலம் ஒருவருடன் இவர் பொதுவெளியில் ஜோடியாக வந்த புகைப்படமும் வைரலானது.
இது அனைத்துமே முன்னாள் கணவரை கடுப்பேத்த தான் என சிலர் கூறி வந்தனர். ஆனால் திரையுலக வட்டாரத்தில் நடிகை அந்த பிரபலத்துடன் டேட்டிங் செய்து வருவதாக கிசு கிசுக்கப்பட்டது.
இது திருமணம் வரை செல்லுமா என்ற சந்தேகம் கூட இருந்தது. தற்போது பார்த்தால் நடிகை தன் காதலரை ரகசிய நிச்சய நிச்சயதார்த்தம் செய்து விட்டாராம்.
விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் அவர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. எது எப்படியோ நடிகை குடும்பம் குட்டி என வாழ்ந்தால் சரிதான் என்கிறது கோடம்பாக்கம் வட்டாராம்.