செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாரிசு படத்தில் ஒரே சீனுக்கு 20 கோடி செலவு பண்ணி, கட் பண்ணிட்டாங்க.. தில் ராஜுவை கிழித்து தொங்க விட்ட தயாரிப்பாளர்

பொங்கலுக்கு ரிலீசாகி இருக்கும் விஜய்யின் வாரிசு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரே சீனுக்கு 20 கோடி செலவு செய்து அதை அசால்ட்டாக வெட்டி எறிந்து விட்டனர் என்று தில் ராஜுவை பிரபல தயாரிப்பாளர் கிழித்து தொங்க விட்டுள்ளார்.

அதாவது வாரிசு படத்தின் முதல் பாதியில் குஷ்பூவின் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால் படத்தை ஒரு குறிப்பிட்ட நீளத்துக்குள் வைப்பதற்கு மிகுந்த சவாலாக இருந்த காரணத்தினால், அவர்களது காட்சிகள் நீக்கிவிட்டனர். ஆனால் குஷ்பூ நடித்த காட்சியை படமாக்குவதற்கு மட்டும் 20 கோடி செலவானது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அசால்டாக அந்த காட்சியை நீக்குவது தில் ராஜுவால் மட்டும் தான் முடியும்.

Also Read: படத்திற்கு குஷ்பூ சீன் தான் முக்கியம்.. வாரிசு பட எடிட்டரின் பரபரப்பான பேட்டி

அதுமட்டுமின்றி வாரிசு படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு காட்சியில், குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து தனித்தனியாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு செல்வார்கள். ஒருவர் மற்றவர்களுடன் பேசிக்க மாட்டார்கள். இதை விஜய் அமர்ந்து கவனிப்பதாக ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். இந்தக் காட்சி மே மாதத்தில் படமாக்கப்பட்டு பிறகு அடுத்த படப்பிடிப்பை டிசம்பரில் வைத்துக் கொள்ளலாம் என்று 6 மாத இடைவெளியை தில் ராஜு படு குழுவிற்கு அளித்தாராம்.

பல கோடி பொருட்ச செலவில் பிரமாண்டமாக போடப்பட்ட செட்டை ஆறு மாதம் அப்படியே விட்டுவிட்டு, 6 மாதத்திற்கு பின் படப்பிடிப்பை மறுபடியும் துவங்கலாம் என்பதெல்லாம் நம்ம ஊரு ப்ரொடியூசர்களுக்கு வான்டடா போய் சாவை தேடிக்கிற மாதிரி தான். இவ்வளவு பெரிய பிரமாண்டமான செட்டை மறுபடியும் ரீடைல் செய்வதெல்லாம் நம்ம ஊரு தயாரிப்பாளர்களுக்கு சாத்தியம் அல்ல. தில் ராஜுவின் புரொடக்சஷன் ஸ்டைலே வேற மாதிரி என்று பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விமர்சித்துள்ளார்.

Also Read: வாரிசு படத்தில் ஒரு டயலாக் கூட இல்லாமல் அசிங்கப்பட்ட பிக் பாஸ் நடிகை.. குஷ்புக்கு இவங்க எவ்வளவோ பரவாயில்ல

இவருக்கு மட்டுமல்ல வாரிசு படத்தில் இடம்பெற்ற குஷ்பூ மற்றும் ஜான் விஜய்யின் காட்சிகள் நீக்கப்பட்டது ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் முதல் பாதியில் குஷ்புவின் காட்சி மிக சிறப்பாக அமைந்திருந்ததாம். அதுமட்டுமின்றி இந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும் என்றால் நிறைய பணம் செலவிடுவது மட்டுமல்லாமல் பலரும் தங்களது உழைப்பை கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் குறைந்தது 15-லிருந்து 20 நாட்கள் அந்த பகுதியை படமாக்க உழைத்திருப்பார்.

ஆனால் எடிட்டிங் என்கின்ற பெயரில் அதை நீக்கியது சரியல்ல. இருப்பினும் வாரிசு படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை மறுபடியும் யூட்யூப்-ல் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் வாரிசு பட குழு இருப்பதாகவும் சமீபத்திய தகவல் வெளியானது. ஆனால் தில் ராஜுவை டார்கெட் செய்து ரவீந்தர் பேசிய இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் சிலர், ‘படத்தைப் பற்றி எவ்வளவோ குற்றம் குறை வெளிவந்தாலும் மூன்றே வாரத்தில் வாரிசு 300 கோடியை வசூல் செய்திருக்கிறது அது பத்தாதா!’ என்றும் பதிலடி கொடுக்கின்றனர்.

Also Read: மெலிந்து ஸ்லிம்மாக மாறிய குஷ்பூவின் புகைப்படங்கள்.. விட்டா 51 வயதிலும் ஒரு ரவுண்டு வருவாங்க போல!

Trending News