Gossip: அந்த மூன்றெழுத்து நடிகை ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தன் காலடியில் வைத்திருந்தார். அந்த அளவுக்கு அவருக்கு ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்தது.
ஆனால் திடீரென ஏற்கனவே திருமணம் ஆனவரை காதலித்து கரம் பிடித்தார். அதேபோல் பக்கத்து மாநிலத்தில் நடிக்க போய் அங்கேயே செட்டில் ஆகியும் விட்டார்.
அதன் பிறகு நடிகை அந்த கலாச்சாரத்திற்கு மாறிவிட்டார். அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்குவது இவருடைய வழக்கம்.
பிரைட் நடிகருக்கு ஓகே சொன்ன வாரிசு நடிகை
தற்போது அவர் வழியில் மகளும் நடிகையாகி விட்டார். ஆரம்பத்தில் சொந்த மொழியில் மட்டும் நடித்து வந்த இவர் தற்போது தென்னிந்திய மொழியில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் அந்த பெரிய ஹீரோவுடன் நடித்த படத்தில் நடிகை தாராள தரிசனம் கொடுத்திருந்தார். அதை அடுத்து பெரிய குடும்பத்து வாரிசுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதற்கிடையில் கோலிவுட் பக்கமும் அம்மணி பார்வை திரும்பி இருக்கிறது. ஏற்கனவே ஒல்லி நடிகர் இவரை தன்னுடன் நடிக்க வைக்க திட்டம் போட்டார்.
ஆனால் நடிகரை பற்றி தெரிந்த நடிகையின் அப்பா நோ சொல்லிவிட்டார். தற்போது வாரிசு பிரைட் நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டாராம்.
ஏற்கனவே சர்ச்சை இயக்குனர் எடுக்கும் வெப் தொடரில் நடிக்கவும் சம்மதித்திருக்கிறார். அதில் பிரைட் நடிகருடன் அறிமுகமாவது அவருக்கு பெரிய சந்தோஷமாம்.
அம்மாவைப் போலவே தமிழில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என நடிகைக்கு ரொம்ப ஆசை. அதை நிறைவேற்ற அவர் இப்போது தயாராகி இருக்கிறார்.