வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நொடிக்கு நொடி திகில், இரத்தம் தெறிக்கும் மூன்று பாகங்கள்.. வாழ்நாளில் மிஸ் பண்ணக்கூடாத ஹாரர் படம்

பொதுவாக ஹாலிவுட் ஹாரர் படங்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது. மற்ற மொழி திகில் படங்களை விட ஹாலிவுட் படங்கள் அதிக த்ரில்லராகவும், சஸ்பென்ஸ் நிறைந்ததாகவும் இருக்கும். அதிகமாக ஹாரர் படங்களை விரும்பி பார்ப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் மிஸ் பண்ணக்கூடாத படம் என்றால் அது The Fear Street Trilogy என்னும் ஆங்கில திரைப்படம் தான்.

The Fear Street Trilogy இந்த படத்தை இயக்கியவர் லெயி ஜனாய்க். இந்த படம் மூன்று பாகங்களை கொண்டது. ‘த பியர் ஸ்ட்ரீட்’ என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. 21ஸ்ட் செண்டியூரி பாக்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்தின் மூன்று பாகங்களும் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆனது.

Also Read: நெஞ்சை உரையவைக்கும் திகில் கெளப்பும் 8 பேய்கள தெரியுமா!!!!!

பேய் படம் என்றால், பேய் இடைவெளியின் போது இல்லை படம் முடியும் பொழுது வரும். ஆனால் இந்த படத்தின் முதல் காட்சியே பேய் தான். தீய சக்திகளால் உருவாக்கப்பட்ட சாத்தான்கள் இந்த படம் முழுக்க வரும். இளைஞர்களை மையமாக கொண்ட கதை இது. தங்கள் ஊரை சுற்றி 100 வருடங்களுக்கு மேல் நடக்கும் கட்டுக்கதைகளை உடைக்க முற்படும் இளைஞர்களை சுற்றிய கதை இது.

‘த பியர் ஸ்ட்ரீட்’ 1-1994, ‘த பியர் ஸ்ட்ரீட்’ 2- 1978, ‘த பியர் ஸ்ட்ரீட்’ 3- 1966 என்னும் மூன்று பாகங்களாக இந்த படம் எடுக்கப்பட்டு நெட்பிளிக்சில் ரிலீஸ் ஆனது. இந்த படம் ஜூன் 2020ல் தியேட்டர் ரிலீசுக்கு ரெடியாகி பின்பு கொரோனா ஊரடங்கு காலத்தினால் OTT ரிலீசுக்கு வந்தது.

‘த பியர் ஸ்ட்ரீட்’ 1-1994 என்னும் முதல் பாகத்தில் தங்கள் ஊரில் நடக்கும் மிருகத்தனம் நிறைந்த கொலைகளை கண்டுபிடித்து தடுக்கும் முயற்சியை அந்த ஊரை சேர்ந்த சில இளைஞர்கள் கையில் எடுக்கின்றனர். அப்போது நடக்கும் திகில் சம்பவங்களை இந்த படம் காட்சிப்படுத்துகிறது.

Also Readதமிழில் வெளிவந்த கொடுமையான 7 பேய் படங்கள்.. லிங்க் உள்ளது தனியாக பார்க்க வேண்டாம்

‘த பியர் ஸ்ட்ரீட்’ 2- 1978 இந்த கொலைகளையெல்லாம் கண்டுபிடிக்க தொடங்கும் போது தான் 1978 ல் இது போன்ற சம்பவம் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு சம்மர் கேம்பில் சைக்கோ ஒருவன் கோடாரியை கொண்டு பல சிறுவர்களை கொலை செய்கின்றான். அதில் தப்பித்த ஒரு பெண்ணைக் கொண்டு இதற்கான காரணத்தை கண்டுபிடிக்கிறார்கள்.

‘த பியர் ஸ்ட்ரீட்’ 3- 1966 ஒவ்வொரு காரணத்தையும் கண்டுபிடிக்கும் போதே தீயசக்தி ஒன்று அந்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவரை தன் வசம் இழுக்க முயற்சிக்கும். தன்னுடைய தோழியை காப்பாற்ற அவர்கள் போராடுவது பயங்கர த்ரில்லராக இருக்கும். மூன்றாவது பார்ட்டில் நடக்கும் சம்பவத்தை கொண்டு முதல் பார்ட்டின் மர்மங்களை அவிழ்க்கும் டிவிஸ்ட் நிறைந்த திரைப்படம் இது.

Also Read: பீதியை கிளப்பி நடுங்க வைத்த 6 திகில் படங்கள்.. அரண்டு போன ரசிகர்கள்

Trending News