சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். கிட்டதட்ட 70 வயதை கடந்தும் ஹீரோவாக நடித்து வருவது சாதாரண விஷயம் அல்ல. இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இதைதொடர்ந்து பல இளம் இயக்குனரிடம் ரஜினி கதை கேட்டு வருகிறாராம். ஆகையால் அடுத்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு ரஜினி பல படங்களில் புக் ஆகி படு பிஸியாக இருக்க உள்ளார். இந்த வயதிலும் இவருடைய கடின உழைப்பை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
Also Read : செஞ்ச தப்புக்கு பரிகாரம் செய்யும் சிவகார்த்திகேயன்.. நடிப்பை தாண்டி ரஜினியை ஃபாலோ செய்யும் மாஸ்டர் மைண்ட்
இந்நிலையில் ரஜினி செய்த ஒரு சாதனையை 25 வருடங்கள் யாராலும் முறியடிக்க முடியவில்லை. ஆனால் கடந்த வருடம் ஒரு வழியாக அந்த சாதனையை பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி முறியடித்துள்ளார். அதாவது வசூல் மன்னன் என்றாலே அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
அவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூலில் கோடிகளை குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவ்வாறு 1998 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான முத்து படம் ஜப்பானில் நல்ல வசூலை பெற்றது. அதாவது கிட்டத்தட்ட 23.5 கோடி வசூல் செய்து இருந்தது.
Also Read : நின்றுபோன படத்தை தூசி தட்டும் ரஜினி.. தலைவர் முடிவால் உச்சகட்ட சந்தோஷத்தில் லைக்கா
கடந்த ஆண்டு வரை அதிக வசூல் செய்த படமாக முத்து படம் தான் இடம் பெற்றிருந்தது. அதன் பின்பு எவ்வளவோ தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும் ரஜினி தான் ஜப்பானில் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக இருந்தார். இந்த சூழலில் கடந்த ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் முத்து படத்தின் வசூலை ஜப்பானில் முறியடித்தது.
அதாவது ஜப்பானில் ஆர்ஆர்ஆர் படம் 24 கோடி வசூல் செய்திருந்தது. மேலும் தமிழ் சினிமாவிலும் ரஜினியின் 2.0 படத்தின் வசூலை தற்போது வரை முறியடிக்க முடியவில்லை. ஆகையால் தான் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற ரஜினியை சொல்வதில் எந்த தவறுமே இல்லை.
Also Read : ரஜினிக்கே இப்படி செஞ்சா புடிக்காது.. கோவத்தில் கிழித்தெறிந்து சீமான் வெளியிட்ட அறிக்கை