புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நிஜ வாழ்க்கையில் செல்வாவிற்கு நடந்த வேதனை.. அத அப்படியே ஒரு படமாகவே எடுத்துட்டாரு

வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து இயக்கிய செல்வராகவன், சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனரும் தயாரிப்பாளருமான தன்னுடைய தந்தை கஸ்தூரி ராஜா அவருடைய படத்தில் வசன எழுத்தாளராக இருந்தவர்.

அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படங்களை இயக்கத் துவங்கி, முதல் முதலாக தன்னுடைய தம்பி தனுஷை கதாநாயகனாக வைத்து கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்பு அடுத்த வருடமே சினிமாவிற்கு இவர் கொடுத்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் 7ஜி ரெயின்போ காலனி.

இதில் சாதாரணமான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு இளைஞனுடைய காதல் எப்படி துவங்கியது. அதன்பிறகு அவன் காதலிக்கும் பெண்ணை வேறு ஒருத்தனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது தன்னுடைய காதலியை வீட்டுச் சிறையில் இருந்து தப்புவித்து அழைத்து வருகிறான். அதன்பிறகு ஒரு சுற்றுலா விடுதியில் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து விட, சிறிய சண்டை காரணமாக தெருவில் இருந்து விலகி செல்லும் போது காதலி வாகனம் ஒன்றில் மோதி இறந்து விடுகிறாள்.

பின்பு அந்த காதலன் காதலியின் நினைவோடு கடைசிவரை வாழ்வது தான் இந்த படத்தின் கதை. 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்த கதிர் தான் செல்வராகவன். அதாவது இந்தப் படத்தில் கதிருக்கு என்னென்னவெல்லாம் நடந்ததோ அதெல்லாம் நிஜ வாழ்க்கையில் செல்வராகவனுக்கும் நடந்திருக்கிறது.

இருப்பினும் இந்தப்படத்தில் தம்முடைய வாழ்க்கையில் நடந்த சோகம் தான் இவையெல்லாம் என்பதை வெளிப்படுத்தாமல் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கதாநாயகன் கதிராக செல்வராகவன் ஒருகாலத்தில் இருந்திருக்கிறார் என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆகையால் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை தான் 7ஜி ரெயின்போ காலனி படமாக இயக்கி உள்ளார் என்ற செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்களால் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Trending News