ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

5 பெரிய ஹீரோக்களுக்கு மரண ஹிட் கொடுத்த பி வாசு.. அப்பாவியான பிரபுவுக்கு 365 நாட்கள் ஓடிய படம்

Director P Vasu: இயக்குனர் பி வாசு இயக்கத்தில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், அதில் முக்கியமான ஹீரோக்கள் நடித்து மரண ஹிட் வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட படங்கள் அந்த நடிகர்களுக்கு மிகத் திருப்புமுனையாக அமைந்து ரசிகர்களிடமிருந்து வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.

ரஜினி: பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, நயன்தாரா, ஜோதிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தி கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. மேலும் சாந்தி திரையரங்குகளில் 890 நாட்கள் ஓடி பாக்ஸ் ஆபீஸில் வெற்றியை பெற்றது.

Also read: ரிலீசுக்கு முன்னாடி கலெக்ஷன் பார்த்துடனும்.. உசுர கொடுத்து மேடையில் ரஜினி பேசியதன் காரணம்

சத்யராஜ்: பி வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வால்டர் வெற்றிவேல் திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், சுகன்யா, ரஞ்சிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியாக சத்யராஜ் நடித்திருப்பார். தவறு செய்தவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் கதாபாத்திரத்தை சரியாக நடித்து மக்களிடமிருந்து அதிக கைதட்டுகளை வாங்கியது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியது.

பிரபு: பி வாசு இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு சின்னத்தம்பி திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபு, குஷ்பூ, மனோரமா, ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பிரபு அப்பாவியாக, சில விஷயங்களை புரிந்து கொள்ள முடியாத வெகுளித்தனமான கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படம் பிரபுவின் கேரியரில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர்களில் ஒன்றாகும். மேலும் 9 திரையரங்குகளில் 365 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

Also read: விஜயகாந்துடன் நடிக்க மறுத்த பிரபலம்.. மொத்தமாய் ஸ்கோர் செய்த பிரபுதேவா

விஜயகாந்த்: பி வாசு இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், மீனா, எம் என் நம்பியார், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜயகாந்த் டிசிபி சேதுபதி ஐபிஎஸ் ஆக நடித்திருப்பார். அத்துடன் தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் போலீஸ் அதிகாரியாக நடிப்பை தரமாக கொடுத்திருப்பார். இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி விஜயகாந்த் க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

சரத்குமார்: பி வாசு இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு கூலி திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், மீனா, ராதா ரவி மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அண்ணன் தங்கையின் பாசத்திற்கு இடையில் நடக்கும் போராட்டங்களை முன்னிறுத்தி காட்டிய படமாக வெற்றி பெற்றது. அத்துடன் சரத்குமார் மீனாவுக்கு வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.

Also read: சரத்குமார் போல் காசுக்காக சூர்யா செய்த காரியம்.. கங்குவா வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை

Trending News