சிவாஜிக்கு பெருமையை சேர்த்த படம்.. 80 அடி கட் அவுட்டால் ஸ்தம்பித்த சென்னை

தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதுவரை எண்ணற்ற சாதனைகள் செய்திருக்கிறார். அதில் பல வருடங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது. அது சிவாஜிக்கும் மிகப்பெரிய பெருமையை தேடிக் கொடுத்தது.

1957ஆம் ஆண்டு புல்லையா இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் தான் வணங்காமுடி. இந்தப் படத்தை புதுமையான முறையில் விளம்பரப்படுத்த நினைத்த சிவாஜி மற்றும் படக்குழு அதற்காக தேர்ந்தெடுத்த விஷயம் தான் 80 அடி உயர கட் அவுட்.

Also read: நெகட்டிவ் ரோலில் சிவாஜி கலக்கிய 5 படங்கள்.. ஆல் ரவுண்டராக இருந்த நடிகர் திலகம்

அந்த வகையில் சிவாஜியின் படத்தை 80 அடிக்கு உருவாக்கும் முயற்சியில் பட குழு ஈடுபட்டனர். இதற்காக வலுவான சாரங்கள் அமைத்து சிவாஜியின் கட் அவுட் ரெடி செய்யப்பட்டிருக்கிறது. உலகிலேயே ஒரு நடிகருக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் வைப்பது அதுவே முதன்முறை. ஆனால் இதைப் பார்த்த போலீசார் விபத்து ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பாதி வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அந்த கட் அவுட்டை தூக்கி சென்று விட்டார்களாம்.

மேலும் இந்த கட் அவுட் பொறுப்பை சென்னை மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் தான் பொறுப்பேற்று இருந்திருக்கிறார்கள். போலீசார் இப்படி பாதியிலேயே தடுத்து நிறுத்தியதால் அவர்கள் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து பேசி அனுமதி கடிதம் வாங்கி இருக்கின்றனர். அதன் பிறகு அந்த கட் அவுட் எந்தவித தடையும் இன்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

Also read: சிவாஜி வில்லனாக நடித்த ஒரே படம்.. மக்களுக்கு தன் மீது வெறுப்பை உண்டாக்கிய நடிகர் திலகம்

அந்த வகையில் சித்ரா தியேட்டரில் சிவாஜியை சங்கிலியால் பிணைத்தபடி இருந்த அந்த கட் அவுட்டை பார்ப்பதற்காகவே மக்கள் தியேட்டருக்கு படையெடுத்து வந்தார்களாம். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் அங்கு கூடி இருக்கிறார்கள். ஆனாலும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது.

இப்படி ஒரு புதுமையான விளம்பரத்தால் படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே மிக உயர்ந்த கட் அவுட் வைக்கப்பட்ட படம் என்ற பெருமையையும் பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு தான் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு உயரமான கட் அவுட் வைக்கப்பட்டு ப்ரமோஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also read: அப்பா, மகனாக நடித்து அதிரிபுதிரி ஹிட்டான 5 படங்கள்.. பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆக பின்னிய சிவாஜி