புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பின்னணி இசையால் வந்த பஞ்சாயத்து.. இளையராஜா, பாலச்சந்தர் மோதலுக்கு காரணமான படம்

80 காலங்களில் தமிழ் சினிமா கொடிக் கட்டி பறந்த நிலையில், அதற்கு முக்கிய காரணங்களாக நடிகர், நடிகைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் முக்கியமான பங்கு எனலாம். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவின் பாடல் தான் எல்லா படங்களிலும் இடம்பெற்றிருக்கும். அதுவும் இயக்குனர் இமயம் பாலச்சந்தரின் பெரும்பாலான படங்களில் இளையராஜாவின் இசை தான் இடம்பெற்றிருக்கும்.

சிந்து பைரவி படத்தின் மூலமாக இளையராஜா, பாலசந்தர் கூட்டணி இணைந்த நிலையில், இளையராஜாவுக்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து புன்னகை மன்னன், மனதில் உறுதி வேண்டும் உள்ளிட்ட பாலசந்தர் இயக்கிய 6 படங்களுக்கு தொடர்ச்சியாக இளையராஜா இசையமைத்தார். மேலும் பாலச்சந்தர் தயாரித்த 14 படங்களுக்கும் இளையராஜா இசையமைத்தார்.

Also Read: உச்சத்தில் இருந்த போதே அடம்பிடித்து வாய்ப்பு கேட்ட இளையராஜா.. எம்எஸ்வி விட்டுக் கொடுத்ததால் செம ஹிட்

ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் காம்போ படங்கள் வெளியாகாமல் போனதையடுத்து பாலசந்தரும் இசையமைப்பாளர்கள் கீரவாணி,  ஏ ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரை இளையராஜாவுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் களமிறக்கினார். அப்படி இவர்கள் இருவரும் பிரியும் அளவிற்கு என்னதான் நடந்தது என்ற உண்மையை பற்றி பார்க்கலாம்.

1989 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. ரஹ்மான், கீதா உள்ளிட்டோர் நடித்த இப்படம் காதல், செண்டிமெண்ட் என உருவாகி சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு ஸ்டேட் விருதையும் பெற்றது. இதனிடையே இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்த நிலையில் படத்தின் பின்னணி இசை வேலைகள் மட்டும் முடியாமல் இருந்துள்ளது.

Also Read: வெறுப்படையச் செய்த இளையராஜா.. ஆணவத்தை அழித்து பாலசந்தர் பண்ணிய பக்கா பஞ்சாயத்து

இதனிடையே பாலச்சந்தர், இளையராஜாவிடம் இதுகுறித்து கேட்டபோது, தனக்கு மேலும் 5 படங்களுக்கு இசையமைக்க வேண்டியுள்ளது. இப்படத்தின் பின்னணி இசையையை இன்னும் கொஞ்சம் நாட்கள் கழித்து முடித்து தருவதாக கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் பாலச்சந்தர் இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டுமென கூறியுள்ளார். அதற்கு இளையராஜா தீபாவளிக்கு வேண்டாம் வேறு நாளில் ரிலீஸ் பண்ணுங்கள் என கூறிவிட்டாராம்.

இதனால் செம கான்டான பாலசந்தர் ஏற்கனவே இவரது படங்களில் உள்ள பின்னணி இசையை தனியாக எடுத்து, ஒரு இசையமைப்பாளரை வைத்து, படத்தில் அந்த பின்னணி இசைகளை வைத்து இப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார். பின்னர் இப்படத்தை பார்த்த இளையராஜா பாலசந்தர் மீது கடும் கோபத்தில் இருந்தாராம். மேலும் இந்த படம் தான் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்த கடைசி படமாகும்.

Also Read: இளையராஜா- ஜேம்ஸ் வசந்த்துக்கும் இருக்கும் தீராத வன்மம்.. 15 வருடத்திற்கு முன் நடந்ததை போட்டு உடைத்த பிரபலம்

Trending News