சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பாரதிராஜாவுக்கே தோல்வி பயத்தை காட்டிய படம்.. ஆனைக்கும் அடிசறுக்கும்

தமிழ் சினிமாவில் பல உன்னத படைப்புகளையும் எதார்த்தமான திரைக்கதைகளையும் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த பெருமைக்குரியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.

அதுமட்டுமல்லாமல் தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த அமலா, ரேவதி, ராதா, ராதிகா போன்ற ஹீரோயின்களையும், ஜனகராஜ், நெப்போலியன், பாண்டியன், சந்திரசேகர், கார்த்திக் போன்ற பல நடிகர்களையும் சினிமாத் துறைக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

தமிழ் சினிமாவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அது பாரதிராஜாவுக்கும் பொருந்தியது. ஏனென்றால் அவருடைய சினிமா வாழ்வில் நிறைய வெற்றி தோல்விகளையும் அவர் பார்த்துள்ளார். ஆனால் அவரே எதிர்பார்க்காத ஒரு தோல்வியும் அவருக்கு கிடைத்தது.

அந்த காலத்தில் பாரதிராஜா, சிவாஜி கணேசன், ராதா ஆகியோரை வைத்து முதல் மரியாதை என்னும் படத்தை எடுத்தார். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படத்தில் சிவாஜியும், ராதாவும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்.

பல விருதுகளை வாங்கிக் குவித்த இந்தத் திரைப்படம் இன்றும் ரசிகர்களின் பேவரைட் திரைப்படம். இந்த படத்தலைப்பை மையமாக வைத்துதான் பாரதிராஜா மீண்டும் ஒரு மரியாதை என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதில் ஹீரோவாக அவரை நடித்திருந்தார்.

அவருடன் இணைந்து நக்ஷத்ரா, மௌனிகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கடந்த 2020 ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பு பெறவில்லை. சொல்லப் போனால் இப்படி ஒரு படம் வெளிவந்தது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அதனால் இந்தப்படம் பாரதிராஜாவுக்கு ஒரு தோல்விப் படமாக அமைந்துவிட்டது. ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது இதுதான் போல.

Trending News