திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினி படத்தால் தலையில் துண்டை போட்ட மார்க்கண்டேயன்.. ஒரே நாளில் ரிலீஸ் ஆனதால் பாடும் சோக கீதம்

Super Star Rajini: உலகம் முழுவதும் இருக்கும்  திரையரங்குகளில் ஜெயிலர் படம் இன்று படம் ரிலீஸ் ஆகி இப்போது வரை நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. ரஜினி ரசிகர்கள் படத்தை தீபாவளி போல் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் படத்தால் மாஸ் ஹீரோ படம் ஒன்று மண்ணை கவ்வி வருகிறது.

ஆந்திராவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படம் ஒன்று ரிலீஸ் ஆக உள்ளது . தமிழகத்தில் மட்டுமல்ல கேரளா, கர்நாடகா பகுதிகளிலும் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இதனால் ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது நாளை  தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருக்கும் போலா சங்கர் என்னும் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Also Read: அலப்பறையை ஆரம்பித்த தலைவர், நெல்சன் தல தப்புமா.? அனல் பறக்கும் ஜெயிலர் ட்விட்டர் விமர்சனம்

இந்த படம் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திலும் ஜெயிலர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த தமன்னா தான் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். அது மட்டுமல்ல வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த லட்சுமி மேனனுக்கு பதில் தெலுங்கில் போலா சங்கர் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தை இயக்கிய மெஹர் ரமேஷ், ‘அஜித் வேதாளம் படத்தில் நடித்ததை விட 10 மடங்கு பயமுறுத்தும் அளவில் சிரஞ்சீவி இந்த படத்தில் மிரட்டி இருக்கிறார்’ என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார். இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு போட்டியாக நாளை ரிலீஸ் ஆக இருக்கும் போலா சங்கருக்கு என்ன நிலைமையாக போகிறதோ என்று இப்போதிலிருந்தே பதைபதைக்கின்றனர்.

Also Read: வாய் சவடால், அஜித் படத்தை தரக்குறைவாக பேசிய இயக்குனர்.. அடாவடி பேச்சுக்கு ஆப்படித்த சம்பவம்

 அது மட்டுமல்ல ஜெயிலர்  படத்தைப் பார்ப்பதற்கு அடுத்தடுத்த நாட்களுக்கான புக்கிங் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் போலோ சங்கர் நாளை வெளியாகி எப்படி சரிக்கு சரி போட்டி போட போகிறதோ என்று ஆந்திராவில் இருக்கும் தியேட்டர்கள் அனைத்தும் சோக கீதம் பாடி வருகிறதாம்.

ஏனென்றால் ரஜினி படத்திற்கு ஃபுல் புக்கிங் ஆகி அங்கேயும் தெலுங்கு மக்கள் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். தெலுங்கு சினிமாவில்  மார்க்கண்டேயன் என போற்றப்படுபவர் சிரஞ்சீவி. அவர் இப்போது தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நேருக்கு நேர் மோத போகிறார். பெரிய வித்தியாசம் இல்லாமல் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுவதால் நிச்சயம் ஜெயிலர் படத்தால் போலா சங்கர் படத்தின் வசூல் பாதிப்படையும் என்று தலையில் துண்டை போட்டுள்ளனர்.

Also Read: பகையை மனதில் வைத்து பரப்பும் நெகட்டிவிட்டி.. ஜெயிலருக்கு கிடைக்கும் மோசமான விமர்சனம்

Trending News