வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்துக்கு பயத்தை காட்டிய சினிஉலகம்.. ஈகோவை விட்டு இறங்கி வரும் ராஜதந்திரம்

அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம் உள்ளனர். சாதாரணமாக அன்பு என்பது இரண்டு தரப்பிலிருந்தும் வரவேண்டும். ஆனால் அஜித் பட விழாக்கள், ப்ரொமோஷன்கள் என எதிலும் கலந்து கொள்ள மாட்டார். அதுமட்டுமல்லாமல் எந்த சமூக வலைத்தளங்களிலும் அஜித் இடம்பெறவில்லை.

அஜித்தின் புகைப்படங்கள் அல்லது படத்தின் அப்டேட்டுகளை அவரது மேனேஜர் தான் வெளியிட்ட வருகிறார். ஆனால் சமீபகாலமாக அஜித்தின் குடும்ப புகைப்படம், பைக் சுற்றுப்பயணம் புகைப்படம் அதிகமாக இணையத்தில் உலாவி வருகிறது. அதுமட்டுமின்றி பொது இடங்களில் அஜித்தையும் காண முடிகிறது.

Also Read :நேர்கொண்ட பார்வை-யில் உண்மையை பேசிய அஜித்.. நிஜத்தில் முட்டாள்தனமான தீர்ப்பை வழங்கிய நீதிபதி!

சமீபத்தில் திருச்சியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில் அஜித் கலந்து கொண்டு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதற்குப் பின்னால் அஜித்துக்கு ஒரு புதிய பயத்தை சினிமா உலகம் காட்டியுள்ளதாக சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

அதாவது தற்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. அதுமட்டுமின்றி எல்லாம் மாநிலங்களிலும் பிரமோஷன் செய்தால் மட்டுமே தற்போது படம் ஓடும் என்ற நிலைமை வந்துள்ளது. மற்ற மொழி ரசிகர்களை கவர்ந்தால் மட்டுமே படம் வெற்றி பெறும் என்பதால் தெலுங்கு, கன்னட நடிகர்கள் பிரமோஷனுக்காக எல்லா நாடுகளுக்கும் சென்று வருகின்றனர்.

Also Read :22 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் நடிகை.. AK62-வில் நயனை நம்பாத விக்னேஷ் சிவன்

இதனால் அஜித்துக்கு ரசிகர்கள் கம்மியாகி விடுவார்களோ என்ற பயம் வந்துள்ளது. மேலும் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக அஜித் தற்போது ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஒரேடியாக தனது ஈகோவை விட்டு விடக்கூடாது என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறார்.

இது கண்டிப்பாக நல்ல விஷயம்தான். அஜித் நல்ல நடிகர், மென்மேலும் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் அவரது நல்ல மனசுக்காக, அவர் பின்னால் நாங்கள் எப்போதும் இருப்போம் என கூறி வருகின்றனர்.

Also Read :ஒரு வாய் சோறு போட மாட்டாரா அஜித்.? எம்ஜிஆருடன் ஒப்பிட்டுப் பேசிய பிரபலம்

Trending News