வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கேரவனை அறிமுகப்படுத்திய முதல் படம்.. விஜயகாந்தை தவிர்த்து வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆச்சரியம்

இப்போதுதான் தமிழ் சினிமாவில் இந்த கேரவன் கலாச்சாரம் எல்லாம் தோன்றியிருக்கிறது. டாப் ஹீரோவில் இருந்து அனைவரும் கேரவன் வசதி செய்து கொடுத்தால் மட்டுமே படங்களில் நடிக்க சம்மதிக்கின்றனர். ஆனால் அந்த காலகட்டத்தில் இது போன்ற வசதிகளை எல்லாம் நடிகர், நடிகைகளுக்கு செய்து கொடுக்க மாட்டார்கள்.

அப்போதெல்லாம் சூட்டிங் நடைபெறும் இடத்தில் ஏதாவது ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். அதில் ஹீரோ, ஹீரோயின்களுக்கென தனித்தனியாக அறைகள் ஒதுக்கி கொடுப்பார்கள். அதுவே காடுகளில் ஷூட்டிங் நடைபெறுகிறது என்றால் இது போன்ற சில வசதிகளும் கிடைக்காமல் போய்விடும்.

Also read: பிரேமலதாவிற்கும் முன் விஜயகாந்த் காதலித்த நடிகை.. குழிபறித்த நட்பு, கறாராக பேசி பிரித்துவிட்ட மனைவி

அங்கு இருக்கும் இடத்தில் ஏதாவது ஒரு மறைவு பகுதியை உருவாக்கி தான் சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் ஹீரோயின்களுக்கு தான் இது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனாலேயே சில ஹீரோயின்கள் காருக்குள்ளேயே உடை மாற்றிக் கொள்வார்களாம். இதுதான் சில வருடங்களுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்தது.

இப்படி ஆர்டிஸ்ட்டுகள் பல சங்கடங்களை அனுபவித்ததால் அதை தவிர்ப்பதற்காக கேரவன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த வகையில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் இந்த கேரவன் எப்போது உபயோகித்தற்கு வந்தது என்றும் அதை யார் முதன்முதலில் உபயோகப்படுத்தினார்கள் என்றும் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

Also read: தமிழ் சினிமாவில் நடித்த 5 முக்கிய அரசியல் தலைவர்கள்.. விஜயகாந்துடன் இணைந்து நடித்த முதல்வர் ஸ்டாலின்

அதாவது இந்த கேரவனை முதன்முதலில் நடிகர் சரத்குமார் தான் உபயோகப்படுத்தி இருக்கிறார். புலன்விசாரணை என்ற திரைப்படத்தில் தான் இந்த கேரவன் பயன்படுத்தப்பட்டது. இதனைக்கும் அந்த படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடிக்கவில்லை. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த திரைப்படத்தில் விஜயகாந்த் தான் ஹீரோவாக நடித்திருந்தார்.

அவருக்கு வில்லனாக தான் சரத்குமார் அந்த படத்தில் நடித்திருப்பார். ஆனால் விஜயகாந்த்துக்கு கூட கேரவன் கொடுக்கப்படாமல் சரத்குமாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டும் சரத்குமார் அதன் பிறகு கேரவனில் ஜிம் போன்ற சிறப்புகளை வைத்திருந்தாராம். இவ்வாறு வில்லனாக இருந்தாலும் ஒரு கெத்துடன் இருந்த சரத்குமார் அதன் பிறகு ஹீரோவாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Also read: சரத்குமார் முதல் மனைவி விவாகரத்து, ராதிகா காரணம் இல்ல.. இந்த நடிகை தானாம்

Trending News