செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த முதல் காதல்.. 2 பேருக்கு ரூட் போடும் சக போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது களைக்கட்டி வருகிறது. ஆரம்பத்திலேயே பரப்பரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி போகப் போக சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதிலும் போட்டியாளர்கள் சாப்பாட்டுக்கு அடித்துக் கொள்வது, பாத்ரூம் சண்டை போன்ற பல விஷயங்கள் சுவாரசியத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் முதல் காதல் முளைத்துள்ளது.

எப்போதுமே பிக் பாஸ் வீட்டுக்குள் ஏதாவது ஒரு காதல் கதை இருக்கும். அந்த வகையில் முதல் சீசன் ஓவியாவில் தொடங்கி கடந்த சீசன் அமீர் காதல் வரை அனைவருக்கும் தெரிந்தது தான். இதில் காதலில் ஜெயித்து திருமணம் வரை சென்றிருப்பது அமீர், பாவனி காதல் மட்டும் தான். அதை தொடர்ந்து தற்போது இந்த சீசனிலும் ஒரு காதல் லீலை அரங்கேறி இருக்கிறது.

Also read:வெளியேறப் போகும் ஜி பி முத்து.. அதிர்ச்சியில் பிக்பாஸ் வீடு மற்றும் ஆர்மி

அந்த வகையில் தற்போது போட்டியாளராக இருக்கும் அசல் குயின்சி மற்றும் நிவாஷினிக்கு ரூட்டு போட்டு வருகிறார். அதிலும் நேற்றைய எபிசோடில் இவர் அந்த இரண்டு பெண்களிடமும் அசடு வழியே பேசியது பச்சையாக தெரிந்தது. அது மட்டுமில்லாமல் நேற்று குயின்சி ஆண்டவரிடம் விக்ரமன் பற்றி ஒரு கருத்தை முன் வைத்தார்.

இதனால் வருத்தம் அடைந்த விக்ரமன் குயின்சியிடம் இது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தமே இல்லாமல் அங்கு ஆஜரான அசல் குயின்சி கையைப் பிடித்து அழுத்துவது, சொரண்டுவது என்று சேட்டை பண்ணிக் கொண்டிருந்தார். பார்க்கும் நமக்கே இந்த விஷயம் கடுப்பானது. சிறிது நேரம் அமைதியாக இருந்த குயின்சி வெளிப்படையாகவே தன் வெறுப்பை காண்பித்தார்.

Also read:அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பிக்க வந்த வைல்ட் கார்ட் என்ட்ரி.. சூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு

ஆனாலும் அடங்காத அசல் அவர் கையைப் பிடித்த படியே நின்று கொண்டிருந்தார். அதன் பிறகு நிவாசினிக்கும் அசீமுக்கும் ஒரு பஞ்சாயத்து நடந்தது. அதிலும் சம்பந்தமில்லாமல் குறுக்கே போன அசல் நிவாஸினி தலையை வருடுவது, தோளில் தட்டுவது என்று சேட்டை செய்தார். இதை பார்க்கும் போது அவர் இந்த இரண்டு பெண்களுக்கும் காதல் தூது விடுவது நன்றாக தெரிகிறது.

அதில் குயின்சி கொஞ்சம் எஸ்கேப் ஆனாலும் வெகுளி பெண்ணாக இருக்கும் நிவாஷினி அவரிடம் சிக்கிக்கொண்டார். அதன் பிறகு அவர்கள் இருவரும் நீச்சல் குளத்தின் பக்கத்தில் படுத்துக்கொண்டு சம்பந்தமில்லாமல் பேசிக் பேசிக் கொண்டிருந்தனர். அதில் அசல் எனக்கு யாரும் கிடையாது என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு பேசினார்.

உடனே நிவாஷினி நீ யாரையும் காதலித்தது கிடையாதா என்று கேட்டார். அதற்கு அவர் இல்லவே இல்லை என்று முகத்தை தொங்க போட்டபடி கூறினார். இப்படி பேசிக்கொண்டே இருவரும் அப்படியே தூங்கி விட்டனர். இதற்கு இடையில் குசும்புக்கார பிக் பாஸ் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஐ லவ் பிக் பாஸ் என்ற போர்டை அடிக்கடி காண்பித்தது தான் ஹைலைட்.

Also read:பிக் பாஸில் ஒஸ்ட், பெஸ்ட் கண்டஸ்டன்ட் யாரு தெரியுமா? ஒரே ஆளையே டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்

Trending News