செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லியோ படத்தைப் பார்த்த தயாரிப்பாளரின் முதல் விமர்சனம்.. கடுப்பாகி சண்டை போட்ட லோகேஷ்

Lokesh-Leo: லோகேஷ் இயக்கத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் லியோ அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது ஜெயிலர் இன்டஸ்ட்ரியல் ஹிட் அடித்திருக்கும் நிலையில் அதை இப்படம் ஓவர் டேக் செய்யுமா என்ற எதிர்பார்ப்பும் திரை உலகில் உருவாகி இருக்கிறது.

அந்த அளவுக்கு லியோ வெளிநாடுகளிலும் அதிக கவனம் ஈர்த்துள்ளது. அது மட்டுமின்றி அங்கு டிக்கெட் புக்கிங் கூட தாறுமாறாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாதியை பார்த்த தயாரிப்பாளர் லலித் அது குறித்து லோகேஷுக்கு போன் போட்டு தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.

Also read: லியோ படத்தில் கைவச்ச சென்சார் போர்டு.. தலைவலியில் லோகேஷ், விஜய் கூட்டணி

ஆனால் அதைக் கேட்டு அவர் கடுப்பாகி விட்டதாக தயாரிப்பாளரே இப்போது வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதாவது லலித் படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜ் கலக்கி விட்டார் என்று லோகேஷிடம் கூறியிருக்கிறார். பொதுவாக ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு எடிட்டரின் பங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அதனாலேயே லலித் பிலோமின் ராஜ் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். உடனே லோகேஷ், சார் நான் தான் டைரக்டர் நீங்கள் அவரை பாராட்டுகிறீர்களே என்று கேட்டாராம். உடனே தயாரிப்பாளர் எடிட்டரிடம், உங்களைப் பற்றி பேசினால் டைரக்டர் கோபப்படுகிறார் என்று போட்டுக் கொடுத்திருக்கிறார்.

Also read: லோகேஷை சைலன்டாக காலை வாரிவிட்ட ரஜினி.. 45 வருட கேரியரில் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட கெட்ட பெயர்

இந்த விஷயத்தை அவரே ஒரு மேடையில் வேடிக்கையாக கூறி இருக்கிறார். ஏனென்றால் பிலோமின் ராஜ் லோகேஷ் உடன் மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அதனால் இருவரும் நண்பர்கள் தான். அந்த உரிமையில் தான் லோகேஷ் அவ்வாறு கேட்டிருக்கிறார்.

இதைப் பற்றி கூறியுள்ள லலித் லியோ எதிர்பார்த்ததற்கு மேலாகவே வந்திருக்கிறது என்று பெருமையாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் தயாரிப்பாளரே தன் படத்திற்கு முதல் விமர்சனத்தை கொடுத்து எதிர்பார்ப்பை தூண்டி இருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Also read: என்னது லியோ லோகேஷ் படமே இல்லையா.? த்ரிஷாவால் சல்லி சல்லியான கூட்டணி

Trending News