புதன்கிழமை, நவம்பர் 6, 2024

‘A’ சர்டிபிகேட் வாங்கிய முதல் தமிழ் படம்.. சிவாஜிக்கு முன்னரே எம்ஜிஆருக்கு கொடுத்த சென்சார் போர்டு

பொதுவாக திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் ஒரு படத்தை எடுப்பதற்கு பல விதிமுறைகள் உள்ளது. மேலும் படம் எடுத்த பின்பு அது சென்சார் போர்டுக்கு சென்று சர்டிபிகேட் வாங்க வேண்டும்.

சாதாரணமாக குழந்தைகள் முதல் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் படம் பார்க்க செல்கிறார்கள். இதனால் சில மோசமான காட்சிகள் அல்லது வன்முறையான காட்சிகள் இடம்பெற்றால் அந்த படங்களுக்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்படும். ஏனென்றால் அந்தப் படங்களுக்கு 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Also Read :தமிழ் சினிமாவிற்கு இதுவரை கிடைக்காத மாற்று நடிகர்.. சிவாஜியையே வளர்த்து விட்ட ஜாம்பவான்

அந்த வகையில் சிவாஜியின் கவரிமான் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. இப்படத்தை பி முத்துராமன் 1979 ஆம் ஆண்டு இயக்கியிருந்தார். இதில் சிவாஜி அவருடைய மனைவியை கொலை செய்து விடுவார். அதுமட்டுமின்றி அவரது மனைவி குடிபோதைக்கு அடிமையாக இருப்பது போன்று காண்பிக்கப்பட்டிருக்கும்.

இதனால் அப்போது கலாச்சார சீர்கேடு விளைவிக்கும் விதமாக இந்த காட்சி இருப்பதால் கவரிமான் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. ஆனால் சிவாஜி படத்திற்கு முன்னரே எம்ஜிஆரின் படம் ஏ சர்டிபிகேட் வாங்கி உள்ளது. 1951 ஆம் ஆண்டு எம்ஜிஆர், நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மர்மயோகி.

Also Read :யாருக்கு வேணும் உப்புச்சப்பில்லாத அந்த அவார்டு.. கடும் கோபத்தில் சிவாஜியை தடுத்த கமல்

இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய பெற்றிருந்தது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கியது. ஏனென்றால் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அந்த காலத்தில் மோகினி போன்ற பேய் காட்சிகள் வடிவமைத்தால் ஏ சர்டிபிகேட் கொடுத்து வந்தனர்.

மேலும் எம்ஜிஆரின் முதல் ஏ சர்டிபிகேட் படம் மர்மயோகி. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதலில் பெரியவர்கள் படமும் அனுமதி அளித்த படமும் இதுதான். இந்த படம் இதே பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆனது. ஹிந்தியில் ஏக் தா ராஜா என்ற பெயரில் கவரிமான் படம் வெளியானது.

Also Read :எம்ஜிஆர் காதுபட அசிங்கமாக பேசிய டெக்னீசியன்.. ஒரு வாரம் காத்திருந்து கொடுத்த பதிலடி

- Advertisement -spot_img

Trending News